குறளி வித்தையா?சரத்பவாருடன் அஜித்பவார், ஃபிரபுல் பட்டேல் உள்ளிட்ட அதிருப்தி கோஷ்டி திடீர் சந்திப்பு!
மும்பை: மகாராஷ்டிரா அரசியலில் புதிய திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை அதிருப்தி தலைவர்களான துணை முதல்வர் அஜித் பவார், ஃபிரபுல் பட்டேல் உள்ளிட்டோர் நேரில் சந்தித்தனர். இதனால் மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் ஏற்கனவே சிவசேனா கட்சி இரண்டாக பிளவுபடுத்தப்பட்டது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கோஷ்டியில் பெரும்பான்மை சிவசேனா எம்.எல்.ஏக்கள் இணைந்தனர். இதனையடுத்து உத்தவ் தாக்கரே அரசு கவிழ்க்கப்பட்டு பாஜகவுடன் ஏக்நாத் ஷிண்டே கோஷ்டி இணைந்து புதிய ஆட்சி அமைந்தது.

இந்நிலையில் திடீரென சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸும் இரண்டாக பிளவுபடுத்தப்பட்டது. அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கோஷ்டியின் 9 அமைச்சர்கள், பாஜக ஆட்சியில் இணைந்தனர். இதனையடுத்து அதிருப்தியாளர்களை தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கையை சரத்பவார் கோஷ்டி மேற்கொண்டது.
Mumbai | Maharashtra Deputy CM Ajit Pawar along with Praful Patel, Chhagan Bhujbal and Dilip Walse Patil at Mumbai's YB Chavan Centre pic.twitter.com/SbyrWOHpe9
— ANI (@ANI) July 16, 2023
மேலும் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கோஷ்டியின் அமைச்சர்களுக்கு முக்கிய துறைகள் ஒதுக்கீடு செய்ய முதல்வர் ஷிண்டேவின் சிவசேனா கோஷ்டி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த பரபரப்புகளுக்கு இடையே இன்று திடீரென மும்பையில் சரத்பவாரை அஜித் பவார், ஃபிரபுல் பட்டேல் உள்ளிட்ட அதிருப்தி கோஷ்டி தலைவர்கள் சந்தித்தனர். இச்சந்திப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஃபிரபுல் படேல், தேசியவாத காங்கிரஸ் ஒருங்கிணைந்து ஒன்றாக இருக்க வேண்டும் என்று சரத்பவாரிடம் வலியுறுத்தினோம். ஆனால் இது தொடர்பாக அவர் எதுவும் எங்களிட ம் தெரிவிக்கவில்லை என்றார். இந்த புதிய சந்திப்புகள் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications