பெரிய பிரச்சனையாக முடியும்.. பாஜக - சிவசேனாவை எச்சரிக்கும் ஆர்எஸ்எஸ்.. முதல்முறை கருத்து!
பாஜகவும் சிவசேனாவும் மாறி மாறி சண்டை போட்டால் அது இரண்டு கட்சிக்கும் பெரிய பிரச்சனையாக முடியும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
Recommended Video
டெல்லி: பாஜகவும் சிவசேனாவும் மாறி மாறி சண்டை போட்டால் அது இரண்டு கட்சிக்கும் பெரிய பிரச்சனையாக முடியும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. ஆனால் அங்கு சிவசேனா, பாஜக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் நேற்று எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியவில்லை.
மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், காங்கிரஸ் 45 இடங்கள், தேசியவாத காங்கிரஸ் 53 இடங்களிலும் வென்றுள்ளது. ஆனால் நான்கு கட்சிகளுக்குள் கூட்டணி உடன்படிக்கை இன்னும் ஏற்படவில்லை.

சுத்தமாக விரும்பவில்லை
இந்த நிலையில் சிவசேனா மற்றும் பாஜகவின் பிளவை ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது. இரண்டு கட்சிகளும் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு மிகவும் நெருக்கம். இதனால் இவர்களின் பிரிவை ஆர்எஸ்எஸ் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறுகிறார்கள்.

சமாதானம் தோல்வி
இதனால் அமைச்சர் நிதின் கட்கரி போன்ற முன்னாள் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பாஜக மற்றும் சிவசேனா இடையே சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் இந்த முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்தது. கடைசி வரை சிவசேனா மற்றும் பாஜக இடையே சமாதானம் ஏற்படவில்லை.

என்ன பேசினார்
இதுகுறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தற்போது கருத்து தெரிவித்துள்ளார். அதில், சுயநலம் மிக மோசமான விஷயம். அரசியலில் சுயநலம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் அரசியல்வாதிகள் மக்கள் இதை புரிந்து கொள்ளமாட்டார்கள்.

சிலர் விட மாட்டார்கள்
சுயநலம் தவறு என்று தெரிந்தும் சிலர் அதை விடாமல் பிடித்து வைத்து இருப்பார்கள். அவர்கள் இப்படி சண்டை போட்டுகொண்டு இருக்க கூடாது. பாஜக மற்றும் சிவசேனா இப்படியே ஒரு விஷயத்திற்காக சண்டை போட்டால் அது இரண்டு பேருக்கும் பெரிய பிரச்சனையாக முடியும், என்று கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications