மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாக்பூர் நஹி... மும்பை ஒன்லி... புதிய வீட்டுக்கு செல்லும் பட்னாவிஸ்

Google Oneindia Tamil News

மும்பை: மஹாராஷ்டிரா மாநில முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அரசு பங்களாவை காலி செய்து விட்டு புதிய வீட்டுக்கு குடிபெயர உள்ளார்.

இதற்காக அவர் மும்பையிலேயே வீடு பார்த்து வருகிறார். நாக்பூரை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் கடந்த 2014-ம் ஆண்டு முதல் மும்பையில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பட்னாவிஸ் மீண்டும் சொந்த ஊரான நாக்பூருக்கு சென்றுவிடுவார் எனக் கூறப்பட்ட நிலையில், அவர் மும்பையிலேயே செட்டில் ஆகும் திட்டத்தில் இருக்கிறார்.

6 வருடங்களில் இல்லாத இமாலய பொருளாதார சரிவு.. நாட்டின் ஜிடிபி 4.5% ஆக குறைந்தது 6 வருடங்களில் இல்லாத இமாலய பொருளாதார சரிவு.. நாட்டின் ஜிடிபி 4.5% ஆக குறைந்தது

அரசு பங்களா

அரசு பங்களா

தெற்கு மும்பையில் உள்ள ''வர்ஷா'' பங்களாவில் (அரசு பங்களா) இருந்து காலி செய்து புதிய வீட்டுக்கு குடிபுகுவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார் மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ். முதலமைச்சராக இருந்த போது வசித்த தெற்கு மும்பையிலேயே இப்போதும் வசிக்க விரும்புகிறார் பட்னாவிஸ்.

குழந்தைகள் படிப்பு

குழந்தைகள் படிப்பு

தேவேந்திர பட்னாவிஸ் மனைவி ஆக்ஸிஸ் வங்கியில் உயர் அதிகாரியாக பணி புரிந்து வருகிறார். மேலும், அவரது குழந்தைகளும் மும்பையிலேயே பள்ளி படித்து வருவதால் மீண்டும் நாக்பூர் செல்லும் எண்ணத்தை கைவிட்டுவிட்டு தொடர்ந்து மும்பையிலேயே பட்னாவிஸ் தங்குகிறார்.

2014 முதல்

2014 முதல்

கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு வரை சொந்த ஊரான நாக்பூரில் வசித்து வந்த பட்னாவிஸ் முதலமைச்சர் ஆனவுடன் மும்பைக்கு குடிபெயர்ந்தார். இதனிடையே கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் தான் அவர் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.

வாய்ப்பில்லை

வாய்ப்பில்லை

மஹாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அரசு பங்களாவுக்கு செல்ல வாய்ப்பில்லை என்றும், பாந்த்ரா பகுதியில் அவர் இப்போது வசிக்கும் பூர்வீக இல்லத்திலேயே அவர் இருக்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது.

English summary
maharashtra ex cm devendra fadnavis house hunt on mumbai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X