கொரோனாவிலிருந்து குணமடைந்த மகாராஷ்டிரா ஆளுநர்.. பணிக்கு திரும்பியதால் அரசியல் களம் விறுவிறுப்பு

Subscribe to Oneindia Tamil

மும்பை: உத்தவ் தாக்கரே அரசுக்கு எதிராக அசாமில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் எம்.எல்.ஏக்கள் முகாமிட்டுள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி மீண்டும் பணிக்கு திரும்பி இருக்கிறார்.

மகாராஷ்டிரா சட்டசபையில் உள்ள 288 இடங்களில் பாஜகவுக்கு 106 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 2019 தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்ட சிவசேனாவுக்கு 55 இடங்கள் கிடைத்தன.

ஆனால் தேர்தலுக்கு பிறகு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் சிவசேனா, காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ், சிறு கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சியமைத்தது.

ஆட்சி கலைப்பு திட்டம்

ஆட்சி கலைப்பு திட்டம்

சிவசேனா தலைமையிலான மகா விகாஷ் அகாடி கூட்டணி ஆட்சிக்கு மொத்தம் 169 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தது. தொடர்ந்து பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்து வந்த ஆளும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளை பல வகைகளில் வளைக்க முயன்றது பாஜக. அதன் பயனாக மாநிலங்களவை மற்றும் சட்ட மேலவைத் தேர்தலில் பாஜகவின் ஆட்டத்துக்கு ஓரளவு வெற்றி கிடைத்தது.

அதிருப்தி எம்.எல்.ஏக்கள்

அதிருப்தி எம்.எல்.ஏக்கள்

இந்த நிலையில் கடந்த 21ம் தேதி பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் உள்ள சிவசேனா அமைச்சர் ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான 34 எம்.எல்.ஏக்கள் முகாமிட்டனர். அதன் பின்னர் பாஜக ஆளும் அசாம் மாநிலத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு கடந்த 2 நாட்களில் மட்டும் மேலும் 5 எம்.எல்.ஏக்கள் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் 39 ஆக அவர்களின் பலம் அதிகரித்துள்ளது.

உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரே

இந்த நிலையில் பேஸ்புக் லைவில் தொண்டர்களுக்கு உரையாற்றிய மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, சிவசேனா எம்.எல்.ஏக்கள், நான் முதல்வர் பதவியில் நீடிக்கக் கூடாது என விரும்பினால் முதல்வர் பங்களாவில் இருந்து அப்படியே வெளியேற தயாராக இருக்கிறேன்." என்று கூறினார். இதையடுத்து அவர், முதலமைச்சருக்கான அதிகாரப்பூர்வ மாளிகையான வெர்சா இல்லத்திலிருந்து பெட்டியுடன் தனது சொந்த வீட்டுக்கு புறப்பட்டார்.

நம்பிக்கையில்லா தீர்மானம்

நம்பிக்கையில்லா தீர்மானம்

அரசுக்கு எதிராக அசாம் ஹோட்டலில் முகாமிட்டிருந்த சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் 23 ஆம் தேதி அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு கடிதம் எழுதினர். மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் யாருக்கு பலம் உள்ளது என்பதை நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் முடிவு செய்யலாம் என சிவசேனா கூட்டணியான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார். சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்தும் இதை உறுதிபடுத்தி இருக்கிறார்.

பணிக்கு திரும்பிய ஆளுநர்

பணிக்கு திரும்பிய ஆளுநர்

இந்த நிலையில் மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷியாரி கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து மீண்டும் ஆளுநர் மாளிகைக்கு திரும்பி இருக்கிறார். 80 வயதான அவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு தெற்கு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக மகா விகாஷ் அகாடி தெரிவித்துள்ள நிலையில், ஆளுநர் வருகை மகாராஷ்டிரா அரசியல் களத்தில் மேலும் விறுவிறுப்படைய செய்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+