மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

105 ஐ விட 56 பெரியது.. வாதிட்ட கணித மேதைகள்.. நல்ல பாடம் கிடைச்சிருச்சு.. எச். ராஜா பலே!

மகாராஷ்டிர முதல்வருக்கு எச். ராஜா ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    In early morning twist | தேவேந்திர பட்னவீஸ் முதல்வரானார் !

    சென்னை: "மகாராஷ்டிராவில் 105 ஐ விட 56 பெரியது என்று வாதிட்ட கணிதமேதைகளுக்கு நல்ல பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது" என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சிவசேனாவை போட்டு தாக்கி ஒரு ட்வீட் போட்டுள்ளார். மேலும் புதிய முதல்வர் பட்னவீஸ்-க்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டுள்ளார்.

    மஹாராஷ்டிராவில் இன்று காலை திடீர் திருப்பமாக பாஜக ஆட்சியமைத்தது. தேவேந்திர பட்நாவிஸ் முதலமைச்சராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சி அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.

    maharashtra govt: h raja comments on maharashtra political twist

    தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் அஜித் பவாரின் இந்த முடிவுக்கும் எந்த தொடர்பு இல்லை என அக்கட்சியின் தலைவர் சரத் பவார் விளக்கம் அளித்தார். எனினும், தேசிய அளவில் இந்த அரசியல் நிகழ்வு மிகப்பெரிய தாக்கங்களை தந்து வருகிறது.
    இதுகுறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதிமுக கூட்டணியில் உள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், "மராட்டியத்தில் சந்தர்ப்பவாத அரசியல் எவ்வளவு வேகமாக பயணிக்கிறது என்பதற்கு மகாராஷ்டிரா அரசியலே சாட்சி" என்று ட்வீட் போட்டிருந்தார்.

    சிவசேனாவுக்காக தயாரித்த எம்எல்ஏக்கள் ஆதரவுக் கடிதம்.. அப்படியே பாஜகவுக்கு மாற்றி விட்ட அஜித் பவார்.!சிவசேனாவுக்காக தயாரித்த எம்எல்ஏக்கள் ஆதரவுக் கடிதம்.. அப்படியே பாஜகவுக்கு மாற்றி விட்ட அஜித் பவார்.!

    இப்போது, அதே அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜாவும் தனது கருத்தை தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார். ஒரு ட்வீட் புதிய முதல்வருக்கு வாழ்த்து சொல்லியும், இன்னொரு ட்வீட், சிவசேனாவை விமர்சித்தும் போட்டுள்ளார்.

    "தனிப்பெரும் கட்சியாக உள்ள பாஜகவிற்கு மகாராஷ்டிரத்தில் நிலையான ஆட்சி அளிக்க வேண்டிய கடமை உள்ளது. மேலும் உடனடியாக தேர்தல் வருவதையும் தவிர்க்க வேண்டும். தனது கடமையை சரியாக நிறைவேற்றி முதல்வர் பொறுப்பேற்றுள்ள திரு ஃபட்னவிஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்" என்கிறது முதல் ட்வீட்.

    "மகாராஷ்டிராவில் 105 ஐ விட 56 பெரியது என்று வாதிட்ட கணிதமேதைகளுக்கு நல்ல பாடம் கற்பிக்கப் பட்டுள்ளது" என்கிறது அடுத்த ட்வீட்.

    கணிதமேதை என்று எச்.ராஜா சொன்னது சிவசேனாவைதான்.. நடந்து முடிந்த அம்மாநில சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனை 56 இடங்களிலும் பிடித்திருந்ததும், இதனையொட்டியே ஒரு மாத கால இழுபறி நடந்து வந்ததையும் சுட்டிகாட்டியே எச்.ராஜா இவ்வாறு விமர்சித்துள்ளார்.

    எச்.ராஜாவின் இந்த ட்வீட்டுக்கு, ஆதரவும், எதிர்ப்பும் என மாறி மாறி கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.அவைகளில் ஒருசில இவை: "தமிழ் நாட்டுக்கும் இதேபோல ஒரு தீர்ப்பு வரவேண்டும் சார்.

    "மகாராஷ்டிராவில் சித்து விளையாட்டு விளையாடி முடிந்தது"

    ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு.. ராஜா அவர்களே

    English summary
    maharashtra govt: h raja comments on maharashtra political twist and congratulations to cm devendra fadnavis
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X