மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜனநாயகத்தின் மீதான சர்ஜிகல் ஸ்டிரைக் இது.. கட்சிகளை உடைக்கிறது பாஜக.. உத்தவ் தாக்கரே பாய்ச்சல்

Google Oneindia Tamil News

Recommended Video

    In early morning twist | தேவேந்திர பட்னவீஸ் முதல்வரானார் !

    மும்பை: கட்சிகளை உடைத்து ஆட்சியில் நீடிக்க பாஜக முயற்சி செய்கிறது என்றும் மகாராஷ்டிராவில் ஜனநாயகத்தின் மீது நடந்த சர்ஜிக்கில் ஸ்டிரைக் இது என்றும் உத்தவ் தாக்கரே பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளார்.

    மகாராஷ்டிராவில், முதல்வர் பதவியை யார் பிரித்து கொள்வது என்பதில் கடந்த ஒரு மாதமாக நடந்த இழுபறிக்கு பிறகு இன்று பாஜக ஆட்சி அமைத்துள்ளது.

    பாஜக, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து மாநிலத்தில் ஆட்சி அமைத்தன. மீண்டும் முதல்வராக தேவேந்திர பட்னாவிசும், துணை முதல்வராக அஜித்பவாரும் பதவி ஏற்றனர்.

    பட்னவீஸ் பதவி பிரமாணம்.. சிவசேனா, தேசியவாத காங், காங். கோபம்.. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருமாபட்னவீஸ் பதவி பிரமாணம்.. சிவசேனா, தேசியவாத காங், காங். கோபம்.. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருமா

    சரத்பவார்

    சரத்பவார்

    இதனால், சிவசேனா, பாஜக இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ள இந்த அரசியல் நிகழ்வு குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும் இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்து தங்கள் நிலைப்பாட்டை விளக்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

    குற்றச்சாட்டு

    குற்றச்சாட்டு

    அதன்படியே இரு தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது உத்தவ் தாக்கரே பேசும்போது, பாஜகமீது கடுமையான குற்றச்சாட்டுகளை பகிரங்கமாகவே முன் வைத்தார். அவர் சொன்னதாவது:

    சர்ஜிக்கல் ஸ்டிரைக்

    சர்ஜிக்கல் ஸ்டிரைக்

    "கட்சிகளை உடைத்து ஆட்சியில் நீடிக்க பாஜக முயற்சி செய்கிறது மகாராஷ்டிராவில் ஜனநாயகத்தின் மீது நடந்த சர்ஜிக்கில் ஸ்டிரைக் இது. ஜனநாயகத்தின் மீதான தாக்குதலுக்கு மகாராஷ்டிர மக்கள் நிச்சயம் பழிதீர்ப்பார்கள். மகாராஷ்டிராவில் அரசியலமைப்பு கேலிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. மக்கள் முன்னிலையிலேயே சிவசேனை அனைத்து முயற்சிகளையும் எடுத்தது

    கேலிக்கூத்து

    கேலிக்கூத்து

    மகாராஷ்டிராவில் ஆட்சியை அமைக்க பாஜக எல்லா விதிகளையும் மீறியுள்ளது. ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கி விட்டது பாஜக. ஹரியானா, பீகாரிலும் இதேபோலதான் அது செய்தது. தேர்தலே தேவையில்லை என்ற நிலையை உருவாக்கி வருகிறது பாஜக.

    பெவிகால்

    பெவிகால்

    பதவி நாற்காலி மீது பெவிகால் தடவி அப்படியே அதிலேயே ஒட்டி இருந்து கொள்ளுங்கள். மக்கள் அளித்த தீர்ப்புக்கும், அரசியல் சாசனத்திற்கும் மிகப் பெரிய அவமரியாதையை தேடிக் கொடுத்து விட்டார் அஜீத் பவார். ஜனநாயகம் என்ற பெயரில் நடந்துள்ள இந்த விளையாட்டு கேலிக் கூத்தாகும்.

    சிவசேனா

    சிவசேனா

    எல்லாவற்றையும் இரவோடு இரவாகவே செய்கிறது. ஒரு தனி மனித ஆதிக்கம் என்பது தவறானது. இதை பாஜக புரிந்து கொள்ள வேண்டும். சுயநல எண்ணம் கொண்டவர்கள். ஆனால் மக்கள் சட்டத்தை கையில் எடுக்க கூடாது. சட்டப்படி எல்லாமே நடக்கட்டும். அதுவரை அனைவரும் அமைதி காக்க வேண்டும். பாஜக சிவசேனாவை உடைத்தால் அதை சிவசேனா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. அதைப் பார்த்து தூங்கிக் கொண்டிருக்க மாட்டோம்" என்றார்.

    English summary
    maharashtra govt: Surgical strike on Maharashtra, accused Uddhav Thackeray
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X