மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிதின் கட்கரி வந்தால் சரியாகும்.. மகாராஷ்டிராவில் பாஜகவின் இறுதி மூவ்.. கடைசியில் இப்படி ஆகிட்டே!

மகாராஷ்டிரா பிரச்சனை சரியாகி விடும், மீண்டும் மாநில அரசியலுக்கு திரும்ப மாட்டேன் என்று மத்திய பாஜக அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆளுநரை சந்திக்கும் பாஜக.. அடுத்தடுத்த நகர்வுகளால் பரபரக்கும் அரசியல் களம்

    மும்பை: மகாராஷ்டிரா அரசியல் பிரச்சனை சரியாகி விடும், மீண்டும் மாநில அரசியலுக்கு திரும்ப மாட்டேன் என்று மத்திய பாஜக அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடிக்கு என்னதான் வழி இருக்கிறது என்று பாஜக தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் வந்து இரண்டு வாரம் ஆகியும் இன்னும் அங்கு பாஜகவால் ஆட்சி அமைக்க முடியவில்லை.

    சிவசேனா ஆதரவு இருந்தால் மட்டுமே பாஜக மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது. அங்கு ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், ஆர்எச்எஸ்பி 1 இடத்திலும் வென்றது. மொத்தமாக பாஜக கூட்டணி 162 இடங்களில் வென்றது.

    சட்ட ரீதியாக என்ன வழி இருக்கிறது.. சிவசேனாவை காலி செய்ய பிளான் போடும் பாஜக.. ஆளுநருடன் ஆலோசனை!சட்ட ரீதியாக என்ன வழி இருக்கிறது.. சிவசேனாவை காலி செய்ய பிளான் போடும் பாஜக.. ஆளுநருடன் ஆலோசனை!

    சிவசேனா கட்சி

    சிவசேனா கட்சி

    இந்த நிலையில் சிவசேனா கட்சி நிதின் கட்கரியை முதல்வராக ஏற்றுக்கொள்ளும் என்று செய்திகள் வந்தது. அதாவது தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக வர ஆதரவு கிடையாது. நிதின் கட்கரி வந்தால் ஏற்றுக்கொள்வோம் என்று சிவசேனா தலைவர்கள் கூறியதாக செய்திகள் வந்தது. பாஜக தலைவர்கள் சிலரும் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

    பாஜக அமைச்சர்

    பாஜக அமைச்சர்

    இது தொடர்பாக வெளியான சர்ச்சைகளுக்கு பாஜக அமைச்சர் நிதின் கட்கரி முற்றுப்புள்ளி வைத்தார். அவர் தனது பேட்டியில், மகாராஷ்டிர அரசியலில் எல்லாம் நல்ல நிலைக்கு திரும்பும். இங்கு சிவசேனா உடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும். நம்பிக்கை இருக்கிறது.

    மாட்டேன்

    மாட்டேன்

    நான் மாநில அரசியலுக்கு திரும்ப வாய்ப்பு கிடையாது. மத்தியில்தான், டெல்லியில்தான் இருப்பேன். மீண்டும் மஹாராஷ்டிர அரசியலுக்கு செல்ல மாட்டேன். யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம்.

    முதல்வர் யார்?

    முதல்வர் யார்?

    இங்கு தேவேந்திர பட்னாவிஸ் தான் முதல்வர். இதில் பாஜக உறுதியாக இருக்கிறது. சிவசேனா எங்கள் முடிவை ஏற்றுக்கொள்ளும். அவருக்கு கீழ்தான் மகாராஷ்டிராவில் அரசியல் மாற்றங்கள் நடக்கும், என்று நிதின் கட்கரி கூறியுள்ளார். இதனால் பாஜகவின் கடைசி மூவும் தோல்வியில் முடிந்துள்ளது.

    நிதின் கட்கரி முடிவு

    நிதின் கட்கரி முடிவு

    இந்த நிலையில் சிவசேனா கட்சி நிதின் கட்கரியை முதல்வராக ஏற்றுக்கொள்ளும் என்று செய்திககளுக்கு சிவசேனா கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. அதில், எங்கள் நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எங்களுக்கு கண்டிப்பாக முதல்வர் பதவி தேவை என்று சிவசேனா கட்சியினர் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

    English summary
    Maharashtra: I won't return to state politics confirms Central Minister Nitin Gadkari.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X