சிவசேனா ஆட்சிக்கு வந்தால் நோ புல்லட் ரயில்.. மொத்தமாக கைவிட பிளான்.. மத்திய அரசின் பரபர திட்டம்
மகாராஷ்டிராவில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்தால், புல்லட் ரயில் திட்டத்தை பாஜக கைவிட வாய்ப்புள்ளதாக செய்திகள் வருகிறது.
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்தால், புல்லட் ரயில் திட்டத்தை பாஜக கைவிட வாய்ப்புள்ளதாக செய்திகள் வருகிறது.
இந்தியாவில் 2023க்குள் புல்லட் ரயிலை இயக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த ரயில் மகாராஷ்டிரா தலைநகர் மும்பைக்கும், குஜராத்தின் அஹமதாபாத்துக்கும் இடையில் இயக்கப்படும்.
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் இதுவாகும். இதன் முதற்கட்ட பணிகளை 2020க்குள் முடிக்கவும் அரசு யோசனை செய்து வருகிறது. இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

கைவிட முடிவு
இந்த நிலையில் மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சிக்கு பதிலாக சிவசேனா கட்சியின் ஆட்சி அமைய உள்ளது. அங்கு சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைய இருக்கிறது. இதனால் மகாராஷ்டிராவில் மத்திய அரசு புல்லட் ரயில் திட்டத்தை கைவிட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

என்ன செலவு
1.60 லட்சம் கோடி இதற்கு செலவு ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் 1.10லட்சம் கோடி ரூபாயை ஜப்பான் அரசு கடனாக கொடுக்கிறது. ஜப்பான் அரசு மூலம் ''ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம்'' வழங்கும் பணத்தில் ஜப்பான் ஊழியர்கள் இந்த புல்லட் ரயில் பாதையை போட இருக்கிறார்கள். மீதி பணத்தை மத்திய அரசு தரும்.

பெயர் வேண்டாம்
இதில் மாநில அரசு பணம் கொடுக்காது. ஆனாலும் சிவசேனா ஆட்சியின் கீழ் புல்லட் ரயில் வந்தால் , அவர்களின் கூட்டணிக்கு பெயர், புகழ் கிடைக்கும் என்று பாஜக நினைக்கிறது. இதனால் அந்த திட்டத்தை கைவிட பாஜக நினைப்பதாக தகவல்கள் வருகிறது. இல்லையென்றால் வேறு இரண்டு மாநிலத்திற்கு இடையில் திட்டத்தை மாற்றவும் வாய்ப்புள்ளது.

என்ன நிலம்
இதற்காக குஜராத் மற்றும் மஹாராஷ்டிராவில் சுமார் 1400 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில் 1120 ஏக்கர் நிலம் தனியாருடையது. அதில் 900 ஏக்கர் நிலம் விவசாய நிலம். இதனால் பல ஆயிரம் விவசாயிகள் பாதிக்கப்பட இருக்கிறார்கள். பலருடைய நிலம் ஏற்கனவே இதற்காக வாங்கப்பட்டுவிட்டது.

அரசு எதிர்ப்பு
இதனால் விவசாயிகளின் எதிர்ப்பை சம்பாதித்துவிட்டு, சிவசேனாவிற்கு பெயர் எடுத்து தரும் வகையில் ஒரு திட்டத்தை கொண்டு வர வேண்டாம் என்று பாஜக நினைப்பதாக கூறுகிறார்கள். இந்த திட்டத்தை கைவிடுவது தொடர்பாக எப்போது வேண்டுமானாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறுகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications