மகாராஷ்டிரா: உச்சகட்ட பதற்றம் ஓய்ந்தது- மராத்தா இடஒதுக்கீடு கோரிக்கை அரசு ஏற்பு- உண்ணாவிரதம் வாபஸ்!
மும்பை: மராத்தா ஜாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்க கோரி மனோஜ் ஜாரங்கே நேற்று பல லட்சம் பேருடன் தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டம் இன்று முடிவுக்கு வந்தது. மராத்தா ஜாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அம்மாநில அரசின் உறுதிமொழியை ஏற்று உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார் மனோஜ் ஜாரங்கே.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பூர்வகுடிகளான மராத்தா ஜாதியினருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது 25 ஆண்டுகால கோரிக்கை. மகாராஷ்டிரா அரசுகள் இதனை ஏற்று சட்டங்கள் நிறைவேற்றிய போதும் உச்சநீதிமன்ற உத்தரவுகளால் நடைமுறைக்கு வராமலேயே கைவிடப்பட்டன.

ஆனாலும் மராத்தா ஜாதியினர் தொடர்ந்து பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அண்மை காலமாக மனோஜ் ஜாராங்கே இந்தப் போராட்டங்களுக்கு தலைமை வகித்து வருகிறார். மராத்தா இடஒதுக்கீட்டை வலியுறுத்தி பல லட்சக்கணக்கான மக்களுடன் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார் மனோஜ் ஜாரங்கே.
இதன் ஒரு கட்டமாக மகாராஷ்டிரா தலைநகர் மும்பையை நோக்கி லட்சக்கணக்கான ஆதரவாளர்களுடன் நேற்று படைதிரட்டி வந்தார் மனோஜ் ஜாரங்கே. முதனால் மும்பை-புனே பழைய நெடுஞ்சாலை போக்குவரத்து முற்றிலும் முடங்கிப் போனது. மும்பை ஆசாத் மைதானத்தில் நேற்று தமது காலவரையற்றப் போராட்டத்தை மனோஜ் ஜாரங்கே தொடங்கினார்.
#WATCH | Navi Mumbai: Maratha reservation activists celebrate after Manoj Jarange Patil announces to end the protests today as the government has accepted their demands pic.twitter.com/V1KxosEHRm
— ANI (@ANI) January 27, 2024
இதனால் மகாராஷ்டிரா அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மனோஜ் ஜாரங்கேவின் மராத்தா இடஒதுக்கீடு கோரிக்கையை ஏற்பதாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உறுதி மொழி கடிதம் ஒன்றை வழங்கினார். இந்த கடிதத்தை ஏற்றுக் கொண்டு தமது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டார் மனோஜ் ஜாரங்கே.
தற்போது மனோஜ் ஜாரங்கேவுக்கு அளித்த உறுதி மொழியின்படி மகாராஷ்டிரா சட்டசபை சிறப்பு கூட்டத் தொடரில் மீண்டும் மராத்தா இடஒதுக்கீடு சட்டம் கொண்டுவரப்பட இருக்கிறது. மேலும் இதர பிற்படுத்தப்பட்டோர் சமூக உரிமைகளை மராத்தா ஜாதியினர் பெறுவதற்கான குன்பி சான்றிதழ்கள் முழுமையாக வழங்கவும் மகாராஷ்டிரா அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications