சட்டசபையில் செய்யுற காரியமா இது? செல்போனில் என்ன அது.. வசமாக சிக்கிய மகாராஷ்டிரா அமைச்சர்
மும்பை: மகாராஷ்டிராவில் சட்டசபையில் இருந்த அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், வேளாண் துறை அமைச்சருமான மானிக்ராவ் கோகதே ஆன்லைன் ரம்மி விளையாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், அவரை பதவி விலக கோரி சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் பாஜக, ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக உள்ளார். இந்த நிலையில் இன்று மகாராஷ்டிரா சட்டசபை கூடியது.

சுப்ரியா சுலே கருத்து
அப்போது சட்டசபை கூட்டத்தொடரின் போது, அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், வேளாண் துறை அமைச்சருமான மானிக்ராவ் கோகதே ஆன்லைன் ரம்மி விளையாடிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் ஆன்லைன் ரம்மி விளையாடும் வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் வைரலான நிலையில், சட்டசபையில் ஆன்லைன் ரம்மி விளையாடிய அமைச்சர் மானிக்ராவ் கோகதே பதவி விலக வேண்டும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக சரத்பவார் கட்சியை சேர்ந்த சுப்ரியா சுலே எம்பி கூறுகையில், "கடந்த 3 மாதத்தில் மட்டும் மகாராஷ்டிராவில் 750 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
விவசாயிகள் தற்கொலை
ஆனால் வேளாண் அமைச்சர் எந்த ஒரு கவலையுமின்றி ஆன்லைனில் ரம்மி விளையாடி கொண்டு இருக்கிறார். இந்த அவமானகரமான செயலுக்காக அவர் தனது அமைச்சர் பதவியினை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையெனில் அவரை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மந்திரி சபையில் இருந்து நீக்க வேண்டும்" என்றார்.
இதேபோல் தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) கட்சியை சேர்ந்த ரோகி பவார் எம்.எல்.ஏ கூறுகையில், "ஆளும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினால் பாஜகவோடு ஆலோசிக்காமல் எந்த ஒரு முடிவினையும் எடுக்க முடியவில்லை. இதனால் வேளாண் துறையில் பல்வேறு விஷயங்கள் கிடப்பில் உள்ளன. மாநிலத்தில் நாள்தோறும் 8 விவசாயிகள் தற்கொலை செய்து வருகிறார்கள்.
காங்கிரஸ், உத்தவ் சிவசேனா விமர்சனம்
ஆனால் இதைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல், வேளாண் அமைச்சர் ஆன்லைன் ரம்மி விளையாடிக்கொண்டு இருக்கிறார் என்று கூறியுள்ளார். இதேபோல் காங்கிரஸ் தலைவரான விஜய் வடேடிவார் இது பற்றி கூறுகையில், விவசாயிகளை பற்றி கவலைப்படவில்லை. இந்த ஏமாற்று அரசு.. துரோக அரசுக்கு விவசாயிகள் பாடம் கற்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார்.
உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனாவை சேர்ந்த முன்னாள் மேயர் கிஷோரி பெட்னேகர், "அமைச்சர் மானிக்ராவ் கோகரே தவறு செய்வது இது முதல் முறை கிடையாது.. அவர் ஏற்கனவே சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறியுள்ளார். அவரின் செயல் ஜனநாயகத்தை அவமதிக்கும் வகையில் உள்ளது" என்றார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications