அஜித் பவாரை நான்தான் பாஜகவிற்கு அனுப்பி வைத்தேனா? நம்பாதீர்கள்.. உண்மையை உடைத்த சரத் பவார்!
அஜித் பவார் பாஜகவில் சேர்ந்தது குறித்து எனக்கு தெரியாது, அவரின் முடிவிற்கு பின் நான் கிடையாது என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பேட்டி அளித்துள்ளார்.
Recommended Video
மும்பை: அஜித் பவார் பாஜகவில் சேர்ந்தது குறித்து எனக்கு தெரியாது, அவரின் முடிவிற்கு பின் நான் கிடையாது என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பேட்டி அளித்துள்ளார்.
இந்தியாவில் அரசியலில் நடந்த மிக முக்கியமான திருப்பங்களில் அஜித் பவார் பாஜகவுடன் கூட்டணி வைத்ததும் ஒன்றாக எதிர்காலத்தில் கண்டிப்பாக பேசப்படும். ஆம் மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க இருந்தது.
ஆனால் திடீர் திருப்பமாக அஜித் பவார் பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தார். அதேபோல் அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவியும் வழங்கப்பட்டது.

அரசியல் சூழ்நிலை
இந்த நிலையில் மகாராஷ்டிராவில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பேட்டி அளித்துள்ளார். அதில், பாஜக கட்சிக்கு மகாராஷ்டிராவில் மெஜாரிட்டி இல்லை. அதுதான் உண்மை. பாஜகவிற்கும் அது தெரியும். அவர்களே அதை ஆளுநரிடம் தெரிவித்தனர்.

பாஜக சொன்னது
முதலில் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க முடியாது என்று பாஜகவே வெளிப்படையாக ஆளுநரிடம் கூறியது. அதன்பின் அவர்கள் தற்போது ஆட்சி அமைத்து குதிரை பேரம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.ஆனால் அவர்களால் ஆட்சியை தொடர முடியாது.

உங்களை போல
அஜித் பவார் பாஜகவுடன் கூட்டணி வைத்தது குறித்து எனக்கு தெரியாது. அவருக்கு பின் என்னுடைய திட்டமும், யோசனையும் இருப்பதாக சிலர் கூறுகிறார்கள். அது முழுக்க முழுக்க தவறு. அஜித் பவார் பாஜகவுடன் கூட்டணி வைத்தது உங்களைப்போல் கடைசியில்தான் எனக்கும் தெரியும்.

அஜித் பவார்
அஜித் பவாரை தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்குவது குறித்து நான் முடிவு எடுக்க முடியாது. அது தனிப்பட்ட நபர் எடுக்க கூடிய முடிவு இல்லை. அது கட்சி சார்பாக ஆலோசனை செய்து எடுக்க வேண்டிய முடிவு, என்று சரத் பவார் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications