162 எம்எல்ஏக்கள் எங்க பக்கம்.. அதிரடியாக நிரூபித்த சிவசேனா.. பாஜக எப்படி மெஜாரிட்டியை நிரூபிக்கும்?
மும்பை ஹயாத் ஹோட்டலில் சிவசேனா கூட்டணி அணிவகுப்பு நடத்தியதன் மூலம், பாஜக கட்சி எப்படி பெரும்பான்மையை நிரூபித்து மகாராஷ்டிராவில் ஆட்சியை தக்க வைக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
மும்பை: மும்பை ஹயாத் ஹோட்டலில் சிவசேனா கூட்டணி அணிவகுப்பு நடத்தியதன் மூலம், பாஜக கட்சி எப்படி பெரும்பான்மையை நிரூபித்து மகாராஷ்டிராவில் ஆட்சியை தக்க வைக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது.
மகாராஷ்டிரா அரசியலுக்கு திருப்பத்திற்கு மேல் திருப்பம் நடந்து வருகிறது. அங்கு தற்போது பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக இருக்கிறார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் துணை முதல்வராக இருக்கிறார்.
இந்த நிலையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் 162 பேரும் இன்று மும்பை ஹயாத் ஹோட்டலில் செய்தியாளர்கள் மற்றும் மக்கள் முன்னிலையில் தோன்றினார்கள். தங்கள் கூட்டணியின் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் வகையில் அவர்கள் மக்கள் முன்னிலையில் தோன்றினார்கள்.

ஆட்சி எப்படி
சிவசேனா கூட்டணி எம்எல்ஏக்கள் எல்லோரையும் மும்பை ஹயாத் ஹோட்டலுக்கு சிவசேனா வரவழைத்தது. இவர்கள் ஆதரவு எங்களுக்குத்தான் இருக்கிறது என்று சிவசேனா இதன் மூலம் நிரூபித்து இருக்கிறது. 162 பேரின் ஆதரவு எங்களுக்குத்தான் இருக்கிறது, நாங்கள்தான் மெஜாரிட்டி என்று சிவசேனா நிரூபித்துள்ளது.

தேசியவாத காங்கிரஸ் எப்படி
இதற்கு முன் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ அஜித் பவார் தனக்குதான் அதிக தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்களின் பலம் இருக்கிறது. நாங்கள் பெரும்பான்மையை நிருபிப்போம். கண்டிப்பாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெறுவோம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

பாஜக தலைவர்
அதேபோல் பாஜகவை சேர்ந்த முக்கிய தலைவர்களும் எங்களுக்கு 160 எம்எல்ஏக்களுக்கும் அதிகமானோர் ஆதரவு இருக்கிறது. சிவசேனா எம்எல்ஏக்கள் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள். அதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் நாங்கள் வெற்றிபெற்று, ஆட்சியை தொடர்வோம் என்று குறிப்பிட்டு இருந்தனர்.

கேள்வி எழுந்துள்ளது
இந்த நிலையில்தான் தற்போது சிவசேனா கூட்டணி 162 எம்எல்ஏக்களை அழைத்து வந்து, தன்னுடைய பலத்தை நிரூபித்து உள்ளது. இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் பாஜக எப்படி பெரும்பான்மையை நிரூபிக்கும். பாஜக தேசிய தலைவர் அமித் ஷா என்ன செய்வார், ஆட்சி கவிழுமா? என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

எவ்வளவு
மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், ஆர்எச்எஸ்பி 1 இடத்திலும் வென்றது. . காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் 45 இடங்கள், தேசியவாத காங்கிரஸ் 53 இடங்கள், சமாஜ்வாதி இரண்டு இடங்கள் வென்றது. இதில் சிவசேனாவிற்கு 162 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளதால், பாஜகவிற்கு 104 எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டுமே உள்ளது. அங்கு பெரும்பான்மையை நிரூபிக்க 145 எம்எல்ஏக்கள் தேவை.












Click it and Unblock the Notifications