Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்ணி.. அண்ணின்னு சொல்லி.. குடிசையில் பலாத்காரம்.. தந்தை, மகன் மொத்த பேரும்? இப்ப அந்த பெண் சீரியஸ்

Subscribe to Oneindia Tamil

மும்பை: செங்கல் சூளையில் நடந்த சம்பவம் ஒன்று, மகாராஷ்டிரா மக்களை நிலைகுலைய செய்து வருகிறது.. இது தொடர்பாக 3 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.. என்ன நடந்தது மருமகளுக்கு?

சமீபகாலமாகவே பெண்களுக்கு பாதுகாப்பு என்பது நம்முடைய நாட்டில் கேள்விக்குறியாகி வருகிறது. அதிலும் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்புகள் அடியோடு குறைந்து கொண்டே வருவதும், பெண்கள் மீதான வன்முறை தாக்குதல்களும் அதிகரித்தபடியே உள்ளன.

maharashtra sister in law father son gang rape

பாலியல் புகார்: பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெருகிவருவதால், பெண் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே சென்றால், அவர்கள் வீடு திரும்பும்வரை பெற்றோர்கள் வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு இருக்க வேண்டிய சூழ்நிலை இன்று வந்துவிட்டது. அதிலும் சில கல்வி நிறுவனங்களிலேயே பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாதபோது, மிகப்பெரிய கலக்கத்தை பெற்றோர்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது.

2 நாட்களுக்கு முன்புகூட, மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜயினி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை, நடுரோட்டில் வைத்து ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.. இந்த வீடியோ சோஷியல் மீடியாவிலும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. பாஜக ஆளும் மாநிலத்தில் நடைபெற்ற இந்த கொடூர சம்பவத்தை காங்கிரஸ் கட்சியும் கொந்தளித்து கண்டித்திருந்தது.

செங்கல் சூளை: இதோ இப்போது மகாராஷ்டிராவிலும் ஒரு கொடுமை நடந்துள்ளது.. தானே மாவட்டத்தில் உள்ள கல்யாணில் செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகிறார் 27 வயது பெண்.. இவர்தான் தற்போது பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்... இவரை பலாத்காரம் செய்தவர்கள், அவரது மாமனாரும், மைத்துனரும் ஆவர்.

குடும்பத்தில் இவர்களுக்குள் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.. ஆனால் அந்த பெண் சூளையில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது, மாமனாரும், மச்சினரும், ஒரு சிறுவனும் சேர்ந்து அந்த பெண்ணை சூளையிலிருந்து தூக்கி கொண்டு, அருகிலிருந்த குடிசை வீட்டிற்குள் புகுந்து பலாத்காரம் செய்துள்ளனர்.

மாமனார்: குடிசைக்குள் சென்றதுமே, மாமனாரும், மச்சினரும், அப்பெண்ணை முதலில் கடுமையாக தாக்கியிருக்கிறார்கள்.. அதற்கு பிறகே மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.. இதுகுறித்து முர்பாத் துணைப் பிரிவு போலீஸ் அதிகாரி ஜகதீஷ் ஷிண்டே செய்தியாளர்களிடம் சொன்னதாவது:

மாமனாரும், மச்சினரும் சேர்ந்து பெண்ணை தாக்கி, பலாத்காரம் செய்திருக்கிறார்கள். இவர்களுடன் ஒரு மைனரும் ஈடுபட்டிருக்கிறார்.. இந்த கொடூர பலாத்காரத்தினால், பெண்ணின் உடல் நலம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.. இதனால், அந்த பெண், மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார்.. பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால், தீவிர சிகிச்சை அவருக்கு நடந்து கொண்டிருக்கிறது.

அதிரடி கைது: பெண் அளித்த புகாரின் பேரில் வன்கொடுமை செய்த , மாமனார், மச்சினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்துள்ளனர்.. தொடர்ந்து அவர்களிடம் விசாரணையும் நடந்து வருகிறது.. கைதான இன்னொரு நபரை, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்துள்ளோம்.. பாதிக்கப்பட்ட பெண் கணவரிடம் இதுகுறித்து சொல்லி உள்ளார்.. ஆனால், கணவரும் சேர்ந்து அந்த பெண்ணை தாக்கியதாக தெரிகிறது. எனவே கணவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளோம்" என்றார்..

குடிசை வீட்டில் மருமகளை தாக்கிவிட்டு, மாமனார், மச்சினரின் இந்த கொடூர செயல், மகாராஷ்டிராவில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+