யாரென்று தெரிகிறதா! இதுதான் சிவசேனாவின் பலம்.. 162 எம்எல்ஏக்கள் முன்னிலையில் உத்தவ் தாக்கரே கர்ஜனை!
இதுதான் சிவசேனாவின் பலம்: இப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும். எங்களின் வழியில் குறிக்கிடலாம் என்று இனியும் நினைக்காதீர்கள் என்று 162 எம்எல்ஏக்கள் முன்னிலையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பேசினார்.
Recommended Video
மும்பை: இதுதான் சிவசேனாவின் பலம்: இப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும், எங்களின் வழியில் குறிக்கிடலாம் என்று இனியும் நினைக்காதீர்கள் என்று 162 எம்எல்ஏக்கள் முன்னிலையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பேசினார்.
மும்பை ஹயாத் ஹோட்டலில் இன்று சிவசேனா ஆதரவு எம்எல்ஏக்கள் அணிவகுப்பு நடத்தினார்கள். சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் மீடியா முன் அணிவகுப்பு நடத்தினார்கள். இதன் மூலம் அவர்கள் தங்கள் பெரும்பான்மையை நிரூபித்துள்ளனர்.
பாஜக தரப்பிற்கு சிவசேனாவின் இந்த அதிரடி நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் 162 எம்எல்ஏக்கள் முன்னிலையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பேசினார்.

என்ன பேசினார்
அதில், உங்களால் எங்களை யாராலும் பிரிக்க முடியாது. உங்களால் முடிந்தால் எங்களை பிரித்து பாருங்கள்.உங்களின் கேமராக்கள் மூலம் இத்தனை எம்எல்ஏக்களை படம் பிடிக்க முடியாது.அவ்வளவு எம்எல்ஏக்கள் இங்கு ஆதரவு தெரிவிக்க கூடி உள்ளனர்.

எங்கள் பலம்
இதுதான் சிவசேனாவின் பலம்: இப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும். எங்களின் வழியில் குறிக்கிடலாம் என்று இனியும் நினைக்காதீர்கள். நாங்கள் வெறும் 5 வருடத்திற்காக இங்கு வரவில்லை. இன்னும் பல வருடங்களுக்கு நாங்கள் மகாராஷ்டிராவை ஆட்சி செய்ய போகிறோம்.

இப்படி செய்யவில்லை
நாங்கள் ஆட்சி அமைக்க வேண்டும் என்று இப்படி செய்யவில்லை. அதிகாரத்திற்கு ஆசைப்படவில்லை. ஆனால் சிலரை தோல்வி அடைய செய்ய வேண்டும். சில அதிகார துஷ்பிரயோகத்தை தோல்வி அடைய செய்ய வேண்டும். இது சாத்தியத்திற்கான போராட்டம்.

போராட்டம்
இந்த போராட்டத்தில் நாங்கள்தான் வெற்றிபெறுவோம். நாங்கள் பாஜகவின் தலையை குறி வைப்போம். இதற்கு பின் இருக்கும் எல்லோரையும் நாங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம்., என்று உத்தவ் தாக்கரே குறிப்பிட்டார்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications