Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2 குடும்பங்களை இணைத்த ஒரு பதவி ஏற்பு விழா.. சிவாஜி சிலைக்கு மரியாதை செய்து வணங்கிய உத்தவ் தாக்கரே

இன்று மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே பதவி ஏற்ற விழாவில் நிறைய நெகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நடந்தது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மகாராஷ்டிராவின் 18-வது முதல்வராக பதவியேற்றார் உத்தவ் தாக்கரே!

    மும்பை: இன்று மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே பதவி ஏற்ற விழாவில் நிறைய நெகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நடந்தது.

    மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்க இருக்கிறது. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அங்கு முதல்வராக பதவி ஏற்று உள்ளார். இதற்காக பெரிய அளவில் விழா நடந்தது.

    மும்பை சிவாஜி பார்க்கில் பதவி ஏற்பு விழா நடந்தது. அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின், எம்பி டிஆர் பாலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விழா எப்படி

    விழா எப்படி

    இந்த பதவி ஏற்பு விழாவிற்கு உத்தவ் தாக்கரே தன்னுடைய சித்தப்பா மகன் ராஜ் தாக்கரேவை அழைத்து இருந்தார். பால் தாக்கரேவின் தம்பி மகன்தான் ராஜ் தாக்கரே. ராஜ் தாக்கரேவிற்கும், உத்தவ் தாக்கரேவிற்கும் இடையில் உறவு அவ்வளவு சரியாக இல்லை. இதனால் ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனா சிவசேனா உடன் சேராமல் தனியாக இருந்தது.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் இந்த விழா மூலம் தற்போது அந்த குடும்பம் இணைந்துள்ளது. இவர்கள் இருவரும் மேடையிலேயே கட்டிப்பிடித்து அன்பை பொழிந்து கொண்டார்கள். இதனால் பிரிந்து போன பால்தாக்கரே தொண்டர்கள் மீண்டும் ஒன்றாக சேர்ந்துள்ளனர்.

    இன்னொரு குடும்பம்

    இன்னொரு குடும்பம்

    அதே சமயம் இன்னொரு பக்கம் அஜித் பவார் குடும்பமும் சரத் பவார் குடும்பமும் ஒன்றாக சேர்ந்து இருக்கிறது. அஜித் பவார் பாஜகவுடன் கூட்டு வைத்ததால் இவர்கள் உறவில் கொஞ்சம் கசப்பு ஏற்பட்டது. ஆனால் 3 நாட்களில் அஜித் பவார் என்சிபி பக்கம் வந்துவிட்டார். இன்று உத்தவ் பதவி ஏற்பு விழா மேடையில் இவரும் உடன் இருந்தார்.

    என்ன ஒரு அன்பு

    என்ன ஒரு அன்பு

    அஜித் பவாரை பார்த்ததும் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே அவரை கட்டிபிடித்து அன்பை பொழிந்தார். இதேபோல் மேடையில் நிறைய சுவாரசியமான சம்பவங்கள் நடந்தது. இந்த பதவி ஏற்பு விழா மொத்தமும் விக்ரமன் படம் போல மிகவும் பாசமாக நடந்தேறியது.

    சிவாஜி சிலை

    சிவாஜி சிலை

    அதேபோல் இன்னொரு பக்கம் பதவி விழாவிற்கு பின் மகாராஷ்டிராவின் மராத்தா போராளி சிவாஜி மகாராஜா சிலை முன்னிலையில் வணங்கி ஆசிர்வாதம் பெற்றார். சிவாஜி சிலையில் விழுந்து அவர் ஆசிர்வாதம் பெற்றார். பின் மக்களை பார்த்து திரும்பி அவர் வணக்கம் வைத்தார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+