மகாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அமைப்போம்.. முதல்முறை வாயை திறந்த காங்கிரஸ்.. அசத்தல் அறிவிப்பு!
மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி நிலையான ஆட்சி அமைக்கும் என்று அம்மாநில முன்னாள் காங்கிரஸ் முதல்வர் பிரித்திவிராஜ் சவான் தெரிவித்துள்ளார்.
மும்பை: மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி நிலையான ஆட்சி அமைக்கும் என்று அம்மாநில முன்னாள் காங்கிரஸ் முதல்வர் பிரித்திவிராஜ் சவான் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்க முடியாது என்று இரண்டாவது முறையாக அறிவித்துவிட்டது. அங்கு தற்போது சிவசேனா கட்சி, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க உள்ளது. இன்னொரு பக்கம் பாஜகவுடன் சேரவும் சிவசேனா முயன்று வருகிறது.
இதனால் மகாராஷ்டிராவில் தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்து வருகிறது. மகாராஷ்டிரா அரசியலில் நிலவி வந்த பிரச்சனை இன்னும் முடிவிற்கு வரவில்லை.

என்ன பேட்டி
இந்த நிலையில் தற்போது மகாராஷ்டிராவில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து அம்மாநில முன்னாள் காங்கிரஸ் முதல்வர் பிரித்திவிராஜ் சவான் கருத்து தெரிவித்துள்ளார். அதில், நாங்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். இன்று இறுதிக்கட்ட ஆலோசனை நடக்கும்.

நாளை முடிவு
நாளை இது தொடர்பாக முக்கிய முடிவு எடுப்போம். நாளை சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் சேர்ந்து ஆலோசனை செய்யும். மகாராஷ்டிரா அரசியலில் நிலவி வந்த பிரச்சனை விரைவில் முடிய போகிறது. இது தற்காலிகம்தான்.

காங்கிரஸ் கூட்டணி
இங்கு விரைவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை அமைக்கும். பாஜக இங்கு மீண்டும் ஆட்சி அமைக்காது. மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணி கண்டிப்பாக நிலையான ஆட்சியை அமைக்கும். அதற்கு நாங்கள் உறுதி கொடுக்கிறோம்.

எங்கள் நிலைப்பாடு
எங்களின் நிலைப்பாடு தொடர்பாக சில சிவசேனா உறுப்பினர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். அவர்கள் இது தொடர்பாக தொடர்ந்து சந்தேகங்களை எழுப்பி வருகிறார்கள். நாளை மாலைக்குள் அனைத்து விதமான சந்தேகங்களும் தீர்க்கப்படும் என்று பிரித்திவிராஜ் சவான் தெரிவித்துள்ளார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications