மகாராஷ்டிராவில் அடங்காத பரபரப்பு- காங்கிரஸ் கூட்டணியை விட்டு தப்பி ஓடுகிறது உத்தவ் தாக்கரே சிவசேனா!

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் புதிய பரபரப்பாக மகா விகாஸ் அகாடி கூட்டணி பிளவுபடுவது உறுதியாகி இருக்கிறது. மகா விகாஸ் அகாடியில் காங்கிரஸுடன் இணைந்து சட்டசபை தேர்தலை சந்தித்ததாலே உத்தவ் தாக்கரே சிவசேனா பெரும் தோல்வியை சந்தித்தது என்கின்றனர் அக்கட்சியின் மூத்த தலைவர்கள். மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தலில் தமது பலத்தை நிரூபிக்க தனித்தே போட்டியிடுவோம் எனவும் உத்தவ் தாக்கரே சிவசேனா சீனியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் மகா விகாஸ் அகாடியில் இருந்து உத்தவ் தாக்கரே சிவசேனா எந்த நேரத்திலும் வெளியேறக் கூடும் என கூறப்படுகிறது.

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் மகா விகாஸ் அகாடி வெறும் 46 இடங்களில்தான் வென்றது. மகா விகாஸ் அகாடியில் உத்தவ் தாக்கரே சிவசேனா 20, காங்கிரஸ் 16, தேசியவாத காங்கிரஸ் 10 இடங்களில் வென்றன. உத்தவ் தாக்கரே சிவசேனா மிகப் பெரும் தோல்வியைத் தழுவி இருப்பது அக்கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

maharashtra assembly election 2024 2024

இது தொடர்பாக உத்தவ் சிவசேனா மூத்த தலைவரான அம்பாதாஸ் தன்வே கூறுகையில், நாங்கள் தனித்தே போட்டியிட்டு பலத்தை நிரூபிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கட்சியில் பெரும்பாலானோர் கருத்து. எங்களுக்கு ஆட்சி அதிகாரம் என்பது முக்கியம் அல்ல. சித்தாந்தம்தான் மிக முக்கியமானது என்றார்.

இதற்கு பதில் தந்துள்ள மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோலே, ஒவ்வொருவரும் தங்களது கருத்தை தெரிவிக்க உரிமை உண்டு என்றார். ஆனால் காங்கிரஸ் மூத்த தலைவர் விஜய் வடேடிவார் கூறுகையில், ஆமாம்.. காங்கிரஸ் கட்சியினரும் உத்தவ் சிவசேனாவை கழற்றிவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிட வேண்டும் என்பதும் எங்கள் கட்சியினர் விருப்பம்தான். ஆனால் காங்கிரஸ் மேலிடம்தான் முடிவு எடுக்க வேண்டும் என்றார்.

உத்தவ் தாக்கரே சிவசேனா மற்றும் காங்கிரஸ் இடையேயான இந்த சலசலப்புக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுவது விரைவில் நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தல்தான். ஒருங்கிணைந்த வலிமையான சிவசேனா, மும்பை மாநகராட்சியை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது; அதேபோல எம்பிக்கள், எம்.எல்.ஏக்களையும் மும்பை பிராந்தியத்தில் கணிசமாக பெற்றிருந்தது. தற்போது அத்தனையும் கைவிட்டுப் போய்விட்டதால் தனித்துப் போட்டியிட்டு செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது உத்தவ் தாக்கரே சிவசேனா என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+