நடு இரவில் அலறல் சத்தம்! பெட்ரூமில் மனைவி செய்த பொல்லாத காரியம்.. மீண்டும் ஒரு ஹனிமூன் படுகொலை?

Subscribe to Oneindia Tamil

மும்பை: ஹனிமூன் கொண்டாட மேகாலயா சென்ற இந்தூர் தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷியின் கொலை நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சம்பவம் முடிவதற்குள் மகாராஷ்டிராவில் மீண்டும் அதேபோன்ற ஒரு கொலை நடந்துள்ளது. திருமணமாகி 15 நாட்களில் மனைவியே கணவனைப் படுகொலை செய்துள்ளார்.

மேகாலயாவுக்கு ஹனிமூன் சென்றபோது கணவர் ராஜாவை அவரது மனைவி சோனம் என்பவரே கொலை செய்தார். தனது காதலன் உதவியில் சோனம் தனது கணவரைக் கொலை செய்தார். இதற்காகக் கூலிப்படை உதவியையும் அவர் கேட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ஒரு பக்கம் அந்த வழக்கு விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகிறது.

Maharashtra crime

மீண்டும் படுகொலை

இதற்கிடையே இந்தூரில் தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி கொலை ஏற்படுத்திய அதிர்வுகள் அடங்குவதற்குள் மீண்டும் அதேபோன்ற ஒரு சம்பவம் மகாராஷ்டிராவின் சாங்லியில் நடந்துள்ளது. திருமணமான 15 நாட்களில் 27 வயது பெண், தனது 53 வயது கணவரை வெட்டிக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

என்ன நடந்தது

சாங்கலி மாவட்டத்தின் குப்வாட் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அனில் லோகண்டே என்ற 53 வயது நபருக்கும் ராதிகா என்ற 27 வயது பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. திருமணமான 15 நாட்களில் கணவன் மனைவி இடையே தாம்பத்திய உறவு குறித்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மனைவி, கணவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் புதன்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் நடந்துள்ளது. இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட ராதிகாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

அனிலின் இரண்டாவது மனைவி தான் இந்த ராதிகா.. அவரது முதல் மனைவி புற்றுநோயால் இறந்துவிட்டார் என்றும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

போலீஸ் சொல்வது என்ன

திருமணத்திற்குப் பிறகு சில நாட்கள் ஆகிவிட்ட நிலையில், தாம்பத்திய உறவு குறித்து அனில் வற்புறுத்தி இருக்கிறார். மனைவி ராதிகா இதைக் கேட்டு எரிச்சலடைந்ததாகவும், இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் போலீசார் கூறுகின்றனர். இது தொடர்பாக குப்வாட் காவல் நிலைய அதிகாரி மேலும் கூறுகையில், "ஆத்திரமடைந்த ராதிகா, தனது கணவர் தூங்கிக் கொண்டிருந்தபோது, கோடாரியால் அவரைத் தாக்கி கொலை செய்தார்" என்றார்.

அந்த பெண்ணை பின்னர் கைது செய்த போலீசார், பாரதிய நியாய சன்ஹிதாவின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்தூர் படுகொலை

கடந்த மாதம் மேகாலயாவுக்குத் தேனிலவுக்குச் சென்ற இந்தூரைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷியை அவரது மனைவி சோனம் என்பவரே படுகொலை செய்தார். இந்த வழக்கில் சோனம் மற்றும் நான்கு பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். சோனம் தனது காதலனுடன் சேர்ந்து ராஜா கொலைக்குச் சதி செய்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர். மேகாலயா ஹனிமூன் கொலை அதிர்ச்சி முடிவதற்குள் மீண்டும் அதுபோல ஒரு சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+