மெஜாரிட்டி கிடைப்பது கஷ்டம்.. அஜித் பவாரை நம்பி அகலக் கால் வைத்த பாஜக.. உண்மை பின்னணி இதுதான்!

மகாராஷ்டிராவில் பாஜகவிற்கு அஜித் பவார் ஆதரவு அளித்தாலும் கூட பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது.

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் பாஜகவிற்கு அஜித் பவார் ஆதரவு அளித்தாலும் கூட பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது. அஜித் பவாரை நம்பி பாஜக அகலக் கால் வைத்து விட்டது என்று கூறுகிறார்கள்.

மகாராஷ்டிரா அரசியலில் நொடிக்கு நொடி எதிர்பார்க்க முடியாத திருப்பங்கள் நடந்து வருகிறது. அங்கு திடீர் என்று நேற்று அதிகாலை பாஜக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்தார்.

இதனால் அவருக்கு தற்போது துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. இதற்கு எதிராக சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உச்ச நீதிமன்றம் சென்றுள்ளது.

என்ன திட்டம்

என்ன திட்டம்

மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில்தான் ஆட்சி அமையும் சூழ்நிலை இருந்தது. அங்கு நேற்று காலை சிவசேனா ஆட்சி அமைக்க திட்டமிட்டு இருந்தது. இவர்களுக்கு தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் எம்எல்எக்களின் ஆதரவும் இருந்தது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீர் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பாஜகவிற்கு ஆதரவு தந்தார். இதன் மூலம் மகாராஷ்டிரா முதல்வராக நேற்று பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் பொறுப்பேற்றார். இதுதான் தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

என்ன சிக்கல்

என்ன சிக்கல்

அதே சமயம் மகாராஷ்டிராவில் பாஜகவிற்கு அஜித் பவார் ஆதரவு அளித்தாலும் கூட பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது. அஜித் பவாரை நம்பி பாஜக அகலக் கால் வைத்து விட்டது என்று கூறுகிறார்கள். அவர்களுக்கு எம்எல்ஏ பலம் மிகவும் குறைவாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை.

இடங்கள் எவ்வளவு

இடங்கள் எவ்வளவு

மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், ஆர்எச்எஸ்பி 1 இடத்திலும் வென்றது. . காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் 45 இடங்கள், தேசியவாத காங்கிரஸ் 53 இடங்கள், சமாஜ்வாதி இரண்டு இடங்கள் என்று மொத்தமாக 104 இடங்களை வென்றது.

என்ன சொல்கிறார்

என்ன சொல்கிறார்

நேற்று நடந்த தேசியவாத காங்கிரஸ் கூட்டத்தில் 40+ எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். அவர்கள் எல்லோரும் தற்போது மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள். ஆனால் அஜித் பவருக்கு 4 எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டுமே தற்போது வரை இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

எவ்வளவு இருக்கிறது

எவ்வளவு இருக்கிறது

ஆனால் அதிலும் கூட 2 பேர் சரத் பவார் உடன் நெருக்கமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜக அங்கு ஆட்சி அமைக்க 42 இடங்கள் தேவை. அதனால் கண்டிப்பாக 42 தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எல்லாம் பாஜகவிற்கு தாவ மாட்டார்கள். அந்த அளவிற்கு மாற்றம் எல்லாம் நடக்காது என்று கூறுகிறார்கள்.

கால்

கால்

பாஜக என்ன செய்தாலும் பெரும்பான்மை பெற முடியாது. அந்த கட்சி தேவை இல்லாமல் அகலக் கால் வைத்துவிட்டது. அஜித் பவாரை நம்பி அவசரமாக் பதவி ஏற்றுவிட்டது. கண்டிப்பாக அவர்களாக பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+