நாளை ஆளுநர்கிட்ட தரணும்.. லெட்டர் தாங்க.. நைஸாக பேசி வாங்கிய அஜித் பவார்.. அன்று இரவு நடந்த சம்பவம்!
Recommended Video
மும்பை: பாஜகவிற்கு ஆதரவாக அஜித் பவார் கொடுத்த 53 தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் எப்படி அவருக்கு கிடைத்தது? இதற்கு பின் நடந்த குளறுபடி என்ன என்ற உண்மை தற்போது வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பாஜகவுடன் கூட்டணி வைத்தார். நேற்று அதிகாலை இந்த அதிரடி திருப்பம் நடந்தது.
இதுதான் தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மகாராஷ்டிராவில் பாஜகவிற்கு அஜித் பவார் ஆதரவு அளித்தாலும் கூட பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது. பாஜகவிற்கு பெரும்பான்மையை நிரூபிக்க நவம்பர் 30 வரை நேரம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆட்சி
இந்த நிலையில் அஜித் பவார் ஆட்சி அமைப்பதற்காக ஆளுநரிடம் ஆதரவு கடிதம் ஒன்றை அளித்து இருக்கிறார். தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 53 பேரின் ஆதரவும் இந்த கடிதத்தில் இடம்பெற்று உள்ளது. இதை பார்த்த பின் அவர் உடனடியாக குடியரசுத் தலைவர் ஆட்சியை வாபஸ் செய்ய சொல்லிவிட்டு பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தார் என்கிறார்கள்.

எப்படி கடிதம்
ஆனால் இந்த கடிதம் எப்படி அஜித் பவாருக்கு கிடைத்தது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பலருக்கும் தெரியவில்லை. அஜித் பவார் முக்கியமான தலைவர் என்றாலும் அவர் இதுபோன்ற அதி முக்கியமான பணிகளை செய்வது கிடையாது. சரத் பவார்தான் இது போன்ற கடிதங்களை வைத்து இருப்பார்.

யார் அவர்
இதற்காக அவர் கட்சியில் சிவாஜிராவ் கார்ஜி என்ற நபரை நியமித்துள்ளார். தற்போது இவர் கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கிறார். இதற்கு உன் ஐஏஎஸ்ஆக இருந்தவர் சரத் பவார் உடனான நட்பால் கட்சிக்குள் வந்து, தற்போது பொதுச்செயலாளராக இருக்கிறார்.

கடிதத்தை வைத்து இருந்தார்
அவர்தான் இந்த கடிதத்தை வைத்து இருந்தார். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அஜித் பவாரிடம் அவரிடம் சென்று கடிதத்தை வாங்கியதாக கூறப்படுகிறது. நாளை சிவசேனா உடன் ஆட்சி அமைக்க வேண்டும். அப்போது கடிதம் தேவைப்படும். அதனால் கொடுங்கள் என்று அவர் வாங்கி இருக்கிறார்.

மறுநாள் என்ன நடந்தது
அதன்பின் மறுநாள் அதிகாலை அதே கடிதத்தை வைத்து அவர் பாஜகவிற்கு ஆதரவு அளித்துள்ளார். இப்படித்தான் சரத் பவார் மூலம் கடிதம் சிவாஜிராவிற்கு சென்று அங்கிருந்து அஜித் பவா-ருக்கு சென்று உள்ளது. இதன் மூலம்தான் ஒரே இரவில் அரசியல் மொத்தமாக மாறியுள்ளது என்கிறார்கள்.

தேசியவாத காங்கிரஸ்
அதே போல் இன்னொரு பக்கம் தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கடிதத்தை அஜித் பவார் அளிக்கவே இல்லை. அவர் பொய் சொல்கிறார். ஆட்சியை காப்பாற்ற வேண்டும் என்று ஆளுநரும் பொய் சொல்கிறார் என்று தேசியவாத காங்கிரசில் சிலர் புகார் வைத்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications