மகாராஷ்டிரா: தொடர் உண்ணாவிரதம்; மராத்தா- ஓபிசி ஜாதிகளிடையே முற்றும் மோதல்- பேரிடியாக பதறும் பாஜக!
மும்பை: மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இம்மாநிலத்தில் மராத்தா ஜாதி மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் ஜாதி ஆகியவற்றுக்கிடையேயான மோதல் அதிதீவிரமடைந்து வருகிறது. இரு ஜாதிகளிடையேயான இந்த அதிதீவிரமான பிளவு ஆளும் பாஜக கூட்டணி அரசுக்கு மிகப் பெரும் சவாலாக உருவெடுத்து நிற்கிறது.
மகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கு அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. லோக்சபா தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலத்தை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரிதும் நம்பி இருந்தது. ஆனால் இந்தியா கூட்டணிதான் மகாராஷ்டிராவில் அதிக இடங்களைக் கைப்பற்றியது. இது பாஜக கூட்டணிக்கு பெரும் அதிர்ச்சியானது.

தற்போது மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. மகாராஷ்டிராவில் பாஜகவின் கூட்டணி கட்சிகளான ஏக்நாத் ஷிண்டே சிவசேனா, அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஏற்கனவே குடைச்சல் கொடுத்து வருகின்றன. இன்னொரு பக்கம் மகாராஷ்டிராவில் மராத்தா மற்றும் ஓபிசி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் ஜாதிகளிடையேயான மோதல் அதி உச்சத்தை எட்டியுள்ளது.
மராத்தா ஜாதியினர் தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என உக்கிரமான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்தப் போராட்டங்களுக்கு மனோஜ் ஜரங்கே தலைமை வகிக்கிறார். ஆனால் ஓபிசி பட்டியலில் மராத்தா ஜாதியினரை சேர்க்கவே கூடாது; இதனால் தங்களது இடஒதுக்கீடு உரிமை பறிபோகும் என அந்த ஜாதியினர் போராடுகின்றனர். இதனை வலியுறுத்தி அந்த ஜாதிகளின் லஷ்மண் ஹேக், நவ்நாத் வாக்ரே ஆகியோர் கடந்த 10 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மிக கடுமையாக எதிர்த்துள்ளார் மராத்தா தலைவர் மனோஜ் ஜரங்கே. மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணி அரசுதான் இத்தகைய இருபெரும் ஜாதிகளுக்கு இடையேயான பிளவுக்கு காரணம் என்கிறார் மனோஜ் ஜரங்கே.
மகாராஷ்டிராவில் இரு பெரும் ஜாதிகளிடையே அதிதீவிரமாகும் மோதல் போக்கும் பிளவும் சட்டசபை தேர்தலில் பெரும் பின்னடைவைத் தரும் என்கிற அச்சத்தில் உறைந்து போயிருக்கிறதாம் டெல்லி பாஜக மேலிடம். இதனை விரைவில் முடிவுக்கு கொண்டு வர மாநில தலைவர்களுக்கும் பாஜக மேலிடம் கட்டளையிட்டுள்ளது என்கின்றன மும்பை தகவல்கள்.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications