உங்க அப்பா, அம்மா எனக்கு ஓட்டு போடாட்டி! வீட்ல சாப்பிடாதீங்க! பிஞ்சு மாணவர்களிடம் எம்எல்ஏ சர்ச்சை
மும்பை: உங்கள் அப்பா, அம்மா எனக்கு ஓட்டு போடாவிட்டால் நீங்கள் இரு நாட்களுக்கு சாப்பிடாதீர்கள் என பள்ளி குழந்தைகளிடம் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) தரப்பு எம்எல்ஏ சந்தோஷ் பங்கர் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநில சட்டசபையின் பதவிக்காலம் வரும் அக்டோபர் மாதம் முடிவடைகிறது. கடந்த தேர்தல் 2019ஆம் ஆண்டு நடந்தது. அப்போது சிவசேனா கட்சி ஆட்சியை பிடித்தது. உத்தவ் தாக்கரே முதல்வரானார்.

இதைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. அதில் ஏக்நாத் ஷிண்டே உள்பட 40 எம்எல்ஏக்கள் உத்தவ் தாக்கரேவிடம் இருந்து பிரிந்து போய் தனி அணியாக உருவாகி பாஜக ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக்கினர்.
அது போல் கட்சியின் சின்னமான வில் அம்பு ஏக்நாத் ஷிண்டே அணிக்கு சொந்தம் என தீர்ப்புகள் வந்தன. இந்த நிலையில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு பாஜக, சிவசேனா (உத்தவ் தாக்கரே), சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), என்சிபி கட்சி உள்ளிட்டவை போட்டியில் உள்ளன. எப்படியு்ம ஆட்சியை பிடிக்க வேண்டு்ம என்ற முனைப்பில் பணியாற்றி வருகின்றன.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப பள்ளிக்கு ஏக்நாத் ஷிண்டே அணியின் எம்எல்ஏ சந்தோஷ் பங்கர் கடந்த வெள்ளிக்கிழமை சென்றிருந்தார். அங்கு அவர் பால் மனம் மாறாத பச்சை குழந்தைகளிடம் வரும் தேர்தலில் உங்கள் தாய், தந்தை எனக்கு ஓட்டு போட சொல்லுங்கள்.
இல்லாவிட்டால் இரு நாட்கள் அவர்கள் கொடுக்கும் உணவை சாப்பிடாதீர்கள் என கூறியிருந்தார். மேலும் அவர் சொன்னதை அப்படியே திரும்ப சொல்லுமாறும் மாணவர்களை நிர்பந்தித்தார். அப்போது ஆசிரியர்களும் பள்ளி ஊழியர்களும் சிரித்தனர். இதற்கு மகா விகாஷ் அஹாதி கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை மீறிய சந்தோஷ் பங்கர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதுகுறித்து என்சிபி சரத் சந்திர பவாரின் செய்தித் தொடர்பாளர் கிளைடி கிராஸ்டோ கூறுகையில் தேர்தல் பிரசாரத்திற்கு குழந்தைகளை எந்த வகையிலும் பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஆனால் சந்தோஷ் அந்த விதிகளை மீறிவிட்டார். எனவே அவர் மீது குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் தொடர்ந்து இது போல் தேர்தல் ஆணையம் வகுத்த விதிகளுக்கு எதிரானதையே பேசி வருகிறார் என்றார். ஆரம்ப பள்ளி என்றால் அங்கு 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையில் குழந்தைகள் படித்து வருவார்கள். அவர்களுக்கு வாக்களிப்பது, தேர்தல் என்றாலே என்னவென அறியாத வயது. அத்தகைய வயதினரிடம் போய் அம்மா, அப்பாவை ஓட்டு போட சொல்லுங்கள் என கூறியுள்ளது கடும் கண்டனங்களை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சிவசேனா (ஷிண்டே) கட்சியில் மீண்டும் இவருக்கு வாய்ப்பு கொடுப்பார்களா என்பது யோசிக்க வேண்டிய விஷயம், அப்படிப்பட்ட நிலையில் சந்தோஷ் பங்கர் தாமாகவே முன் வந்து தனக்கு ஓட்டு போட சொல்லுங்கள் என கூறுவது என்ன அர்த்தத்தில் என நெட்டிசன்கள் விமர்சிக்கிறார்கள். மேலும் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளன, அப்படியிருந்தும் பால் மனம் மாறாத குழந்தைகளிடம் எதற்கு பிரச்சாரம் என்றும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications