இந்தியாவின் மிகப்பெரிய ‘ஹோம் கிச்சன்’! சப்பாத்தி செய்ய மட்டும் வருடத்திற்கு 24 லட்சம் சம்பளம்?

Subscribe to Oneindia Tamil

இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவராக இருக்கும் முகேஷ் அம்பானி வீட்டில் இருப்பது தான் இந்தியாவின் மிகப்பெரிய ஹோம் கிச்சன் என அழைக்கப்படுகிறது. மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் 27 மாடி ஆன்டிலியா வீட்டில் பற்றி தினமும் ஒரு தகவல் வெளியாகும் நிலையில், இன்று இந்த வீட்டில் இருக்கும் மாபெரும் கிட்சன் குறித்த தகவல்கள் டிரெண்டாகி வருகின்றன.

இந்த மாபெரும் ஹோம் கிச்சன் குறித்து முக்கியமாக பேசப்படுவது, இங்கு தினமும் சுமார் 4,000 சப்பாத்தி தயாரிக்கப்படுவதும், இந்த வீட்டில் இருக்கும் பலதரப்பட்ட கிட்சன்களும் தான். ஏம்ப்பா இந்தியாவே வாயை பிளந்து பார்க்கும் ராமேஸ்வரம் கஃபே-வில் கூட இவ்வளவு சப்பாத்தி சமைக்கமாட்டார்களே, அப்படியிருக்கும் நிலையில் அம்பானி வீட்டில் ஏன் தினமும் 4000 சம்பாத்தி சமைக்கிறார்கள்?

Mukesh ambani mumbai nita ambani Ambani Antilia 4000 Rotis Mukesh Ambani Kitchen Secrets Antilia Roti Chef Salary Ambani Family Vegetarian Diet Antilia Staff Meals Daily 4000 Mukesh Ambani Antilia 4000 rotis daily Antilia kitchen 4000 rotis Ambani roti chef salary 2 lakh Antilia roti making machine Ambani family vegetarian menu Antilia staff size 600 Mukesh Ambani daily breakfast idli sambar Antilia multiple kitchens Ambani Antilia leftovers donation roti chef salary Antilia 24 lakh Antilia high tech kitchen setup Ambani Gujarati dal lunch Antilia live in staff meals India richest home kitchen rotis Mukesh Ambani Antilia food facts 4000 4000 2 600 24

ஒரு குடும்பத்திற்காக மட்டும் அல்ல

இந்த சப்பாத்தி அம்பானி குடும்பத்திற்காக மட்டும் அல்ல. ஆன்டிலியாவில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் விருந்தினர்களுக்கும் உணவு தயாரிக்கப்படுகிறது. மொத்தமாக தினமும் 400 முதல் 600 பேர் வரை அங்கு சாப்பிடுகின்றனர். இதனால் தான் சப்பாத்தி எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

சாதாரண வீட்டு சமையல் அல்ல

ஆன்டிலியாவின் சமையலறை ஒரு சாதாரண வீட்டு சமையல் அறை போன்றது அல்ல, இது ஒரு பெரிய ஹோட்டல் அல்லது கம்பெனி கிச்சன் போல செயல்படுகிறது. பல மாடிகளில் தனித்தனி சமையலறைகள் உள்ளன. குடும்பத்திற்காக, விருந்தினர்களுக்காக, விழாக்களுக்காக என்று தனித்தனியாக உணவு தயாரிக்கப்படுகிறது. சப்பாத்தி தயாரிக்க நவீன இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. அதே நேரத்தில் ஒவ்வொரு கிச்சனிலும் 5 ஸ்டார் ஹோட்டலில் அனுபவம் பெற்ற செஃப்-கள் தான் சமைக்கின்றனர்.

வருடம் முழுவதும் கொண்டாட்டம்

அம்பானி குடும்பம் சற்று பெரியது, 3 பிள்ளைகள், அவர்களின் மனைவி, குழந்தைகள், சம்பந்திகள், சகோதரர்கள், சகோதரிகள், நிறுவனத்தின் நெருங்கியவர்கள், பார்ட்னர்கள் என பெரிய லிஸ்ட் இருக்கிறது. இவர்களின் பிறந்தநாள், திருமண நாள், விழாக்கள், பண்டிகைகள், நிறுவனத்தின் உயர்மட்ட கூட்டம், பாலிவுடன் பிரபலங்களுடன் பார்ட்டி, தீபாவளி, பொங்கல் என அனைத்தும் ஆன்டிலியா வீட்டில் தான் கொண்டாடப்படுகிறது.

இந்த கொண்டாட்டத்திற்கென தனி பார்டி ஹால் செட்அப் வீட்டிலேயே உள்ளது. இதனால் இந்த கொண்டாட்டத்திற்கான சமையல் முழுவதும் வீட்டிற்குள்ளேயே செய்யப்படுவதால் வருடமும் முழுவதும் அம்பானி வீட்டி கிட்சன் பிசியாகவே இருக்கும்.

Mukesh ambani mumbai nita ambani Ambani Antilia 4000 Rotis Mukesh Ambani Kitchen Secrets Antilia Roti Chef Salary Ambani Family Vegetarian Diet Antilia Staff Meals Daily 4000 Mukesh Ambani Antilia 4000 rotis daily Antilia kitchen 4000 rotis Ambani roti chef salary 2 lakh Antilia roti making machine Ambani family vegetarian menu Antilia staff size 600 Mukesh Ambani daily breakfast idli sambar Antilia multiple kitchens Ambani Antilia leftovers donation roti chef salary Antilia 24 lakh Antilia high tech kitchen setup Ambani Gujarati dal lunch Antilia live in staff meals India richest home kitchen rotis Mukesh Ambani Antilia food facts 4000 4000 2 600 24

அம்பானி குடும்பத்தின் எளிய உணவு

அம்பானி குடும்பம் பெரிய செல்வந்தர்கள் என்றாலும், அம்பானி குடும்ப உறுப்பினர்களின் உணவு பழக்கம் மிகவும் எளிமையானது. மொத்த குடும்பமும் முழுக்க சைவ உணவையே சாப்பிடுகின்றனர். காலை உணவில் இட்லி, சாம்பார் போன்ற சாதாரண உணவுகள், மதிய உணவில் தாள், அரிசி, காய்கறிகள், ரொட்டி போன்றவை இடம்பெறும். இரவு உணவு மிகவும் லைட்டான உணவு வகைகளாக இருக்கும். ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு அம்பானி குடும்பத்திற்கு சத்தான உணவுகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.

ஊழியர்களும் குடும்பம் போலவே

ஆன்டிலியாவில் சுமார் 600 பேர் வேலை செய்கிறார்கள். சமையல்காரர்கள், பாதுகாப்பு பணியாளர்கள், டிரைவர்கள், வீட்டு வேலைக்காரர்கள் என பலர் உள்ளனர். இவர்களுக்கு தனியாக தங்கும் வசதியும், உணவும் வழங்கப்படுகிறது. முக்கியமாக, ஊழியர்களுக்கு தயாரிக்கப்படும் உணவும், குடும்பத்தினருக்கு தயாரிக்கப்படும் உணவும் ஒரே தரத்தில் இருக்கும் வகையில் திட்டமிட்டப்பட்டு உள்ளது.

Mukesh ambani mumbai nita ambani Ambani Antilia 4000 Rotis Mukesh Ambani Kitchen Secrets Antilia Roti Chef Salary Ambani Family Vegetarian Diet Antilia Staff Meals Daily 4000 Mukesh Ambani Antilia 4000 rotis daily Antilia kitchen 4000 rotis Ambani roti chef salary 2 lakh Antilia roti making machine Ambani family vegetarian menu Antilia staff size 600 Mukesh Ambani daily breakfast idli sambar Antilia multiple kitchens Ambani Antilia leftovers donation roti chef salary Antilia 24 lakh Antilia high tech kitchen setup Ambani Gujarati dal lunch Antilia live in staff meals India richest home kitchen rotis Mukesh Ambani Antilia food facts 4000 4000 2 600 24

ரூ.2 லட்சம் சம்பளம் பெறும் சமையல்காரர்

இந்த வீட்டில் பணியாற்றும் மக்களுக்கு முக்கிய உணவாக இருப்பது சப்பாத்தி என்பதால் தினமும் 4000 சப்பாதி தயாரிப்பை கவனிக்கும் தனிநபரும் நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த வீட்டில் மிகவும் முக்கிய சமையல்காரராக திகழும் இவருக்கு மாதம் சுமார் 2 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார் என்று கூறப்படுகிறது. கணக்கு போட்டல் வருடத்திற்கு 24 லட்சம் ரூபாய்.

இதேவேளையில் அனைத்து செஃப்களுக்கும் 2 லட்சம் சம்பளமா என்றால் இல்லை, ஒவ்வொருவரின் பணியின் முக்கியதுவம் மற்றும் அவர்களின் அனுபவம் கொண்டு சம்பளம் மாறுப்படுகின்றன். குறிப்பாக அம்பானி குடும்பத்திற்கு சமைக்கும் செஃப்களுக்கு கட்டாயம் அதிகப்படியான சம்பளம் இருக்கும்.

உணவு வீணாகாது

ஆன்டிலியாவில் உணவு எப்போதும் புதிதாகவே தயாரிக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் எல்லா 4000 சப்பாத்திகளும் செய்யப்படுவதில்லை. காலை, மதியம், இரவு என பிரித்து தயாரிக்கப்படுகிறது. மீதமுள்ள உணவுகள் வீணாகாமல் தானமாக வழங்கப்படுகின்றன.

ஒரு நாளில் 400-600 பேர் உணவருந்தும் போது, ஒருவருக்கு 2-3 ரொட்டிகள் எடுத்தாலும், மொத்த எண்ணிக்கை ஆயிரங்களில் இருக்கும். அதனால் 4,000 ரொட்டிகள் என்பது ஆச்சரியமானதாக இருந்தாலும், அந்த பணி சூழலில் இது சாதாரணமானதே.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+