அம்பானி வீட்டருகே வெடிபொருட்கள் நிரப்பிய கார் நின்ற விவகாரம்: மும்பை போலீஸ் கமிஷனர் பணியிட மாற்றம்!
மும்பை: மும்பையில் தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் பங்களா அருகே 'ஜெலட்டின்' குச்சிகள் நிரப்பப்பட்ட கார் ஒன்று பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு நடந்து வரும் நிலையில் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பிர் சிங் இட மாற்றம் செய்யப்பட்டார்.
மஹாராஷ்டிராவின் தெற்கு மும்பையில் வசித்து வரும் தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் பங்களா அருகே 'ஜெலட்டின்' குச்சிகள் நிரப்பப்பட்ட கார் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது.

அதில் அம்பானிக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட கடிதம் கைப்பற்றப்பட்டது. இதற்கிடையே அந்த காரின் உரிமையாளர் மன்சுக் ஹிரன் என்பவர் மர்மமான முறையில் இறந்தார். இந்த வழக்கையே விசாரித்து வரும் தேசிய புலனாய்வு அமைப்பினர் மும்பையைச் சேர்ந்த, உதவி இன்ஸ்பெக்டர் சச்சின் வாஸே என்பவரை கைது செய்தனர். சச்சின் வாஸேவை சில அதிகாரிகள் பின்னால் இருந்து இயக்குவதாக தேசிய புலனாய்வு அமைப்புக்கு தெரிய வந்தது.
இந்த வழக்கில் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பிர் சிங் என்பவரை விசாரணை வளையத்தில் கொண்டு வர என்.ஐ.ஏ.அதிகாரிகள் திட்டமிட்டனர். இதனை தொடர்ந்து பரம்பிர் சிங் முதல்வர் உத்தவ் தாக்கரேவை சந்தித்து பேசினார்.
இதன்பின்னர் பரம்பிர் சிங் மும்பை போலீஸ் கமிஷனர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக ஹேமந்த் நாக்ரலே என்பவர் கமிஷனராக நியமிக்கப்பட்டார். பரம் பிர் சிங் உள்துறை காவலர் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications