ஜொலி ஜொலிப்பு! முகேஷ் அம்பானியின் அன்டீலியா வீட்டை பார்த்தீர்களா? ஊரெல்லாம் இதுதான் பேச்சு
மும்பை: இந்திய பணக்காரரான முகேஷ் அம்பானியின் 27 அடுக்கு குடியிருப்பான அன்டீலியாவில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜெய்ஸ்ரீராம் என்றும் கோயிலின் மாதிரியும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக மேலாளரான முகேஷ் அம்பானி, இந்திய பணக்காரர்களுள் ஒருவர் ஆவார். அவருக்கு சொந்தமாக உலகிலேயே இரண்டாவது விலை உயர்ந்த வீடாக கருதப்படும் அன்டீலியா என்ற பெயரிலான வீடு மும்பையில் உள்ளது.

இது மொத்தம் 27 மாடிகளை கொண்டது. முகேஷ் அம்பானி தனது மனைவி நீடா அம்பானிக்காக கட்டப்பட்ட காதல் கோட்டை என்றே சொல்லலாம். 2011 ஆம் ஆண்டு இந்த வீட்டிற்கு வந்தனர். இந்த வீட்டின் தற்போதைய மதிப்பு மட்டும் ரூ 25 ஆயிரம் கோடியாகும். விண்ணை முட்டும் அளவுக்கு மிகவும் உயரமான இந்த கட்டடம் 568 அடி அதாவது 173 மீட்டர் உயரம் கொண்டது. இதன் மொத்த பரப்பளவு 4 லட்சம் சதுர அடியாகும்.
இங்கு 168 கார் ரிப்பேர் செய்யும் கடைகள் உள்ளன. வீட்டு விசேஷங்களை நடத்துவதற்கு ஒரு பெரிய ஹால் இருக்கிறது. 50 பேர் உட்கார்ந்து பார்க்கும் தியேட்டர், மாடி தோட்டங்கள், நீச்சல் குளம், ஸ்பா, மருத்துவமனை, கோயில் உள்ளிட்டவை இருக்கின்றன. அது போல் இங்கு பனி அறை உள்ளது. இந்த அறையில் சுவற்றில் இருந்து பனி உருகும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 8 அளவு நிலநடுக்கம் வந்தாலும் இந்த கட்டடம் உறுதித்தன்மையுடன் இருக்கும். உலகின் மிகவும் விலை மதிப்புள்ள கட்டடமாக இது கருதப்படுகிறது. இங்கு 9 அதிவேக லிப்ட்கள் உள்ளன. மேலும் இந்த கட்டடத்தில் பணியாற்றுவோருக்கென தனி அறைகள் உள்ளன. 2010 ஆம் ஆண்டே இந்த வீடு கட்டி முடிக்கப்பட்டாலும் 2011 ஆம் ஆண்டுதான் அம்பானி குடும்பம் குடியேறியது.
இப்படி சிறப்பு வாய்ந்த அன்டீலியா வீட்டில் வசித்து வரும் முகேஷ் அம்பானியும் நீடா அம்பானியும் அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் அயோத்தியில் ராமர் கோயிலில் பால ராமர் பிரதிஷ்டை செய்யப்படும் நிலையில் ஜெய்ஸ்ரீராம் என அன்டீலியா வீட்டில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
ராமர் கோயில் கோபுரத்தின் மாதிரியும் ஹாலோகிராம்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இந்த நிகழ்வையொட்டி ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகங்களான மும்பை, ஜாம்நகர், நகோதானே, நாக்பூர், காக்கிநாடா, சில்வசா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அது போல் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தினரும் கலந்து கொள்ள இன்று அவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications