மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம்.. பெங்களூர்-மும்பை நெடுஞ்சாலை முடக்கம்! ஒரு கார் கூட நகரல.. பதற்றம்
மும்பை: மகாராஷ்டிராவில் மராத்தா இட ஒதுக்கீடு கோரி போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், பெங்களூர்- மும்பை நெடுஞ்சாலையை மறித்து போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மகாராஷ்டிராவில் பெரும்பான்மையாக உள்ள மராத்தா பிரிவினர் நீண்ட காலமாக தங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர். கல்வி, வேலைவாய்ப்பில் அவர்கள் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 2018இல் மராத்தா இட ஒதுக்கீடு போராட்டத்தில் இதில் 10 பேர் தற்கொலை செய்து கொண்டனர். அப்போது இருந்து மகாராஷ்டிரா பாஜக அரசு இட ஒதுக்கீடு வழங்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மராத்தா இட ஒதுக்கீடு: இருப்பினும், உச்சநீதிமன்றம் இதை ரத்து செய்தது. இதனால் அங்குள்ள மராத்தா பிரிவினருக்கு இட ஒதுக்கீடு கிடைக்காமலேயே இருந்தது. இதற்கிடையே மராத்தாவுக்கு இட ஒதுக்கீட்டை அக். 24ஆம் தேதிக்குள் கொண்டு வர வேண்டும் என்று கெடு விதித்திருந்தனர். இருப்பினும் இட ஒதுக்கீடு வழங்கப்படாத நிலையில், மீண்டும் மராத்தா பிரிவினர் போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர். சமூக செயற்பாட்டாளர் மனோஜ் ஜரங்கே பாட்டீல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
இதற்கிடையே இப்போது மராத்தா பிரிவினர் தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர். மும்பை- பெங்களூரு நெடுஞ்சாலையில் போராட்டக்காரர்கள் மறியலில் ஈடுபட்டுள்ளதால் அங்கே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இது நாட்டில் இருக்கும் முக்கிய நெடுஞ்சாலைகளில் ஒன்றாக இருக்கும் நிலையில், போராட்டத்தால் அங்கே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பிலும் வாகனங்கள் வரிசைகட்டி நிற்கிறது. இருப்பினும், போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிடத் தாயாராக இல்லை என்று அறிவித்துள்ளனர்.
ரயில் மறியல்: அதேபோல அங்குள்ள மராட்டிய கிராந்தி மோர்ச்சா என்ற அமைப்பினர் சோலாப்பூரில் ரயில் மறியல் போராட்டத்திலும் இறங்கினர். அவர்கள் ரயில் தண்டவாளத்தில் டயர்களை எரித்து போராட்டத்தை நடத்தினர். இந்தப் போராட்டம் தொடர்பாக ராம் ஜாதவ் மற்றும் நிஷாந்த் சால்வே என இருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பெரும் போராட்டத்திற்குப் பிறகு அவர்களை ரயில் தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தினர்.
இதற்கிடையில், மகாராஷ்டிராவின் ஜல்னா மாவட்டத்தில், ஒரு கும்பல் பஞ்சாயத்து அலுவலகத்தில் தீ வைத்துள்ளனர். மராத்தா இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய அவர்கள், அலுவலகத்திற்கு தீ வைத்துள்ளனர். அப்போது அலுவலகத்தின் இரண்டு அறைகளில் இருந்த சில முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருட்கள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீவிரமடையும் போராட்டம்: இதே ஜல்னாவில் நடந்த மற்றொரு சம்பவத்தில், பத்னாபூர் தாலுகாவின் ஷெல்கான் கிராமத்தில் உள்ள ரயில்வே கேட்டில் மராத்தா சமூகத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் ரயில் மறியலில் ஈடுபட முயன்றுள்ளனர்.. போராட்டக்காரர்கள் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தியுள்ளனர். அவர்களையும் போலீசார் அங்கிருந்து பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர்.
இதற்கிடையே மராத்தா இட ஒதுக்கீடு போராட்டத்தில் நேற்றைய தினம் மகாராஷ்டிவாரின் பீட் மாவட்டத்தில் உள்ள தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ பிரகாஷ் சோலங்கேவின் வீட்டிற்குப் போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். சோலங்கேவின் வீட்டிற்கு வெளியே திரண்ட போராட்டக்காரர்கள், முதலில் அவருக்கு எதிரான கோஷங்களை எழுப்பியுள்ளனர். பின்னர், அங்கிருந்த வாகனத்தின் மீது கற்களை வீசிய போராட்டக்காரர்கள், வீட்டை தீ வைத்து எரித்துள்ளனர். இப்படி நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்து வருவதால் அங்கே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications