"அந்த பெண்ணை கல்யாணம் பண்ணிக்கோ.. ஜாமீன் தரோம்!" பலாத்கார வழக்கில் மும்பை ஐகோர்ட் விதித்த நிபந்தனை
மும்பை: பலாத்கார வழக்கு ஒன்றில் 26 வயது இளைஞருக்கு ஜாமீன் வழங்க மும்பை ஐகோர்ட் விதித்த விநோதமான நிபந்தனை பேசுபொருள் ஆகியுள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்தே வருகிறது. சில சமயங்களில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றும் நிகழ்வுகளும் நடக்கிறது.
இதுபோன்ற நேரங்களில் நீதிமன்றங்கள் மட்டுமே பெண்களுக்குத் தீர்ப்பைப் பெற்றுத் தர இடமாக உள்ளது. இதற்கிடையே மும்பை ஐகோர்ட் பலாத்கார வழக்கில் கூறிய கருத்துகளைப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புகார்
கடந்த பிப்ரவரி 2020இல் இளம்பெண் ஒருவர் தனது காதலன் மீது மும்பை போலீசில் புகார் அளித்தார்.. அந்தப் பெண் தனது புகாரில், "நாங்கள் 2018ஆம் ஆண்டு முதல் காதலித்து வருகிறோம். எங்கள் உறவு குறித்து அவரது குடும்பத்தினருக்கு நன்கு தெரியும். இருப்பினும், அவர்கள் இதை எதிர்க்கவில்லை. 2019இல் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இது குறித்து நான் எனது காதலுக்குக் கூறிய பின், அவர் என்னைத் தவிர்த்து வருகிறார்" என்று கூறி இருந்தார்.

குழந்தை
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்மந்தப்பட்ட அந்த நபரைக் கைது செய்தனர். அதேநேரம் கர்ப்பம் குறித்து தனது குடும்பத்தினரிடம் கூற அந்த பெண்ணுக்கு விருப்பம் இல்லை. இதனால் வீட்டை விட்டு வெளியேறிய அந்தப் பெண், கர்ப்ப காலத்தைத் தனிமையில் கழித்து உள்ளார். மேலும், கடந்த 2020 ஜனவரி மாதம் அரசு மருத்துவமனையில் குழந்தையைப் பெற்று எடுத்து உள்ளனர்.

தலைமறைவு
அந்த குழந்தையை அவரும் வளர்க்கவில்லை. காதலனிடமும் கொடுக்கவில்லை. மாறாகப் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை ஒரு கட்டிடத்தின் முன் விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். குழந்தையைக் கைவிட்ட குற்றத்திற்காக அந்த பெண் மீது தனியாக ஒரு புகார் பதியப்பட்டு உள்ளது. இந்த புகாருக்குப் பயந்து பெண் தலைமறைவாக உள்ளார். அதேநேரம் இந்த பெண் காதலன் மீது அளித்த புகாரில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.

ஜாமீன்
அந்த இளைஞர் மீது பலாத்கார புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கை விசாரித்த மும்பை ஐகோர்ட் அந்த 26 வயதான இளைஞருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. அதாவது அந்தப் பெண் அடுத்த ஒரு ஆண்டிற்குள் கிடைத்துவிட்டால், அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கி உள்ளது. அதேநேரம் ஓராண்டிற்குப் பின் அந்த பெண் வந்தால் திருமணம் செய்யத் தேவையில்லை என்றும் நீதிபதி தெரிவித்தார்.

நீதிபதி கருத்து
இந்த வழக்கு விசாரணையின் போது அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகவும் குழந்தையைப் பார்த்துக் கொள்ளவும் தாயாராக உள்ளதாகத் தெரிவித்தார். இருப்பினும், அந்தப் பெண்ணை கண்டுபிடிப்ப முடியவில்லை என்று தெரிவித்த போலீசார், அந்த குழந்தையை ஏற்கனவே மற்றொரு தம்பதி தத்தெடுத்துவிட்டதாகத் தெரிவித்தனர். குழந்தையை வீசி சென்ற வழக்கு அவர் மீது நிலுவையில் இருப்பதாலேயே அவர் தலைமறைவாக இருக்கலாம் நீதிபதி தெரிவித்தார்

பரபர நிபந்தனை
மும்பை ஐகோர்ட் நீதிபதி மேலும் கூறுகையில், "இந்தச் சம்பவத்தைப் பொறுத்தவரை அந்த ஆணும் பெண்ணும் முழு சம்மதத்துடன் உறவில் இருந்து உள்ளனர். இந்தச் சம்பவம் நடக்கும் போது அந்த பெண் மேஜராகவே இருந்து உள்ளார். இதை அவரே ஒப்புக்கொண்டு இருக்கிறார். குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அந்த இளைஞர் திருமணம் செய்து கொள்ளத் தாயாராக உள்ளதாகத் தெரிவித்து உள்ளார்.

ஜாமீன்
இதன் காரணமாக அடுத்த ஒரு வருட காலத்திற்குள், அந்த பெண் கண்டுபிடிக்கப்பட்டால் அவரை திருமணம் செய்து கொள்ள இளைஞர் சம்மதம் தெரிவித்தால் அவரை ஜாமீனில் விடுவிப்பது பொருத்தமாக இருக்கும் என நான் கருதுகிறேன்.. அதேநேரம் ஓராண்டிற்கு மேல் ஆகிவிட்டது என்றால் இந்த நிபந்தனை பொருந்தாது" என்று அவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications