பணியாளரின் ஆடைகளை களைந்து சித்ரவதை.. நாக்கால் ஷுவை சுத்தம் செய்ய வைத்த கொடூரம்.. தடதடத்த மும்பை
மும்பை: கடையில் ஏலக்காய் திருடியதாக கூறி பணியாளரை தாக்கி ஆடைகளை கழற்றி சித்ரவதை செய்ததோடு நாக்கால் ஷுவை சுத்தம் செய்ய வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நவிமும்பையில் உள்ள ஏபிஎம்சி மார்க்கெட்டில் மளிகை பொருள் விற்கும் கடை நடத்தி வருபவர் தயாலாஜிபாய் பானுஷாலி. இவரது கடையில் தினமும் கூட்டம் அலைமோதும்.

இதனால் கடையில் சில பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தான் கடையில் இருந்து ஏலக்காய் உள்ளிட்ட நறுமண பொருட்கள் மாயமானதாக கூறப்படுகிறது.
தயால்ஜிபாய் பானுஷாலிக்கு கடையில் பணியாற்றும் பணியாளர் ஒருவர் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அந்த பணியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தயால்ஜிபாய் பானுஷாலி மற்றும் அவரது கடையில் பணியாற்றும் சஞ்சய் சவுத்ரி லாலாஜி பாபுபாய் பாகி, வீரேந்திர குமார் லட்சமண் கவுதம், யோகேஷ், கரண் உள்ளிட்டவர்கள் அவரை தாக்கினர்.
மேலும் அவர்கள் அந்த பணியாளரின் ஆடைகளை களைந்து ஆபாசமாக பேசி திட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி அந்த பணியாளரை வலுக்கட்டாயப்படுத்தி கடை உரிமையாளர் தயால்ஜிபாய் பானுஷாலியின் ஷுவை நக்கி சுத்தம் செய்ய வைத்து சித்ரவதை செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தை அவர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் தான் பாதிக்கப்பட்ட நபர் சம்பவம் தொடர்பாக போலீசில் புகாரளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications