Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உடையும் பாஜக கூட்டணி? விட்டு கொடுக்காத ஷிண்டே.. மீண்டும் பரபரப்பாகும் மும்பை! நொடிக்கு நொடி குழப்பம்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரத் தலைநகர் மும்பையில் சமீபத்தில் தான் உள்ளாட்சித் தேர்தல் முடிந்திருந்தது. இருப்பினும், எந்தக் கட்சியில் இருந்து அங்கு மேயர் தேர்வாவார் என்பதில் குழப்பம் நிலவி வருகிறது. இந்த விவகாரத்தில் பாஜக மற்றும் ஷிண்டே சிவசேனா என இரு தரப்புமே விட்டுக் கொடுக்க மறுப்பதால் கூட்டணியில் சலசலப்பு உருவாகியுள்ளது.

மகாராஷ்டிராவில் உள்ள மும்பை உட்படப் பல்வேறு மாநகராட்சிகளில் கடந்த வாரம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதில் மும்பை உள்ளாட்சித் தேர்தலில் பாஜக- சிவசேனா, தாக்கரே சகோதரர்கள், காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவியது. இதில் பாஜக- ஷிண்டே சிவசேனா கூட்டணி பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் வென்றன.

Mumbai Mayor Deadlock BJP vs Shinde Sena Clash Which party will get the Maharashtra capital top post

மும்பை மாநகராட்சி

மும்பை மாநகராட்சியில் மொத்தம் 227 இடங்கள் இருக்கும் சூழலில் அங்கு அதிகாரத்தைக் கைப்பற்றற்ற குறைந்தது 114 சீட்களில் வெல்ல வேண்டும். அங்கு பாஜக 89 இடங்கள், ஷிண்டே சிவசேனா 29 இடங்கள் என மொத்தம் 118 இடங்களை இந்தக் கூட்டணி கைப்பற்றியது. இருந்த போதிலும் மேயர் பதவிக்கு யார் வருவார்கள் என்பதில் குழப்பம் நிலவி வருகிறது. இந்தச் சூழலில் தான் மும்பை மேயர் பதவி தொடர்பாக பாஜக மற்றும் ஷிண்டே சிவசேனா தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்துகிறார்கள்.

விட்டுக் கொடுக்காத பாஜக

முன்னதாக இது குறித்துப் பேசிய பாஜக தலைவர் ஒருவர், மேயர் பதவி விவகாரத்தில் சமரசம் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். அவர் மேலும், "எங்களுக்குத் தேவையான பலம் இருக்கிறது. எனவே, மேயர் பதவியில் சமரசம் செய்து கொள்ள முடியாது. எங்களுடன் ஷிண்டே சிவசேனா உடன் நிற்கும் என நம்புகிறோம். மேயர் பதவி நிச்சயம் கிடைக்கும்" என்றார்.

மகாராஷ்டிர உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீலும் இதே கருத்தை வெளியிட்டார். மேயர் யார் என்பதை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தான் முடிவு செய்வார் என்றும் அதிக இடங்களில் வென்றதால் பாஜகவில் இருந்தே ஒருவர் மேயர் பதவிக்கு வர வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

ஷிண்டே சிவசேனா

அதேநேரம் மேயர் பதவியை விட்டுத் தர ஷிண்டே சிவசேனா ரெடியாக இல்லை எனத் தெரிகிறது. கடந்த 1985 முதலே (1992- 1996 4 ஆண்டுகள் தவிர்த்து) மும்பை மாநகராட்சி சிவசேனா கட்டுப்பாட்டிலேயே இருந்துள்ளது. சிவசேனாவை சேர்ந்த ஒருவரே மும்பை மாநகராட்சியின் மேயராக இருந்துள்ளார். இதனால் அதை விட்டுத் தர ஷிண்டே சிவசேனா ரெடியாக இல்லை.

உத்தவ் தாக்கரே தரப்பும் கூட இதே விவகாரத்தை வைத்து ஷிண்டே சிவசேனாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. மராத்தியர் ஒருவரின் கீழ் தான் மும்பை இருக்க வேண்டும் என்றும் அதை பாஜகவுக்கு விட்டுத் தரக்கூடாது என்றும் தாக்கரே தரப்பு கூறி வருகிறது. இது குறித்து ஷிண்டே சிவசேனாவின் சஞ்சய் ராவத் மேலும் கூறுகையில், "மும்பையின் மேயர் யார் என்பதை முடிவு செய்ய ஷிண்டேவின் தலைவர்கள் மத்திய அமைச்சர் அமித் ஷாவின் காலடியில் அமர வேண்டும். இது ஒட்டுமொத்த மகாராஷ்டிராவுக்கும் அவமானம்" என்றார்.

சலசலப்பு

கடந்த ஜனவரி 16ம் தேதி மும்பை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், அதைத் தொடர்ந்து கட்சித் தாவலை தடுக்க ஷிண்டே தரப்பு உறுப்பினர்கள் நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கடந்த சில நாட்களாகவே அவர்கள் நட்சத்திர ஹோட்டலில் தான் இருந்து வருகிறார்கள். மேயர் பதவி தங்களுக்கு வேண்டும் என்பதில் ஷிண்டே தரப்பு உறுதியாக இருக்கும் நிலையில், இதனால் கூட்டணியில் சலசலப்பு உண்டாகி இருக்கிறது.

மும்பையில் ஓபிசி, பிசி, எஸ்சி, எஸ்டி என எந்தப் பிரிவைச் சேர்ந்தவர் மேயர் என்பதை முடிவு செய்யும் குலுக்கல் இன்று நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்தே எந்தச் சமூகத்தினர் மேயராக தேர்வு செய்யப்படுவார் என்பதில் ஒரு தெளிவு கிடைக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+