அசைவம் சாப்பிடக் கூடாது.. அசிங்கமாக நடந்த காதலன்.. கலங்க வைத்த மும்பை பெண் விமானியின் முடிவு
மும்பை: மும்பை அந்தேரி பகுதியில் காதலனால் பொதுஇடங்களில் வைத்து அசிங்கப்படுத்தியதும், அசைவம் சாப்பிடுவதை நிறுத்துமாறு கூறி அடிக்கடி துன்புறுத்தப்பட்டு வந்த பெண் விமானி எடுத்த முடிவு பலரையும் கலங்க வைத்துள்ளது . போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் இளம் பெண் விமானியின் காதலனை போலீசார் கைது செய்தனர்.
மும்பை அந்தேரி கிழக்கு மரோல் கனக்கியா மெயின் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. அந்த குடியிருப்பில் இளம்பெண் சிருஷ்டி துலி(வயது 25) என்பவர் வசித்து வந்தார். இவர் ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் விமானியாக பணிபுரிந்து வந்தார். இவரது சொந்த ஊர் உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் ஆகும்.

பெண் விமானி சிருஷ்டி துலி சம்பவத்தன்று அதிகாலை 3 மணி அளவில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அந்தப் பகுதியில் உள்ள போவை போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து விரைந்து வந்த போலீசார்,சடலமாக தொங்கிய விமானி சிருஷ்டி துலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து மும்பை மாநகரின் போவை போலீசார் சிருஷ்டி துலியின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தினார்கள். அந்த விசாரணையில் விமானி சிருஷ்டி துலியின் காதலனான டெல்லியைச் சேர்ந்த ஆதித்யா பண்டிட்(27) என்பவர் உடன் தங்கி இருந்துள்ளார். அவர் அடிக்கடி சிருஷ்டி துலியை பொதுஇடங்களில் வைத்து அசிங்கப்படுத்தியதும், அசைவம் சாப்பிடுவதை நிறுத்துமாறு கூறி அடிக்கடி துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சல் அடைந்த சிருஷ்டி துலி தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சிருஷ்டி துலியை தற்கொலைக்கு தூண்டிய காதலன் ஆதித்யா பண்டிட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.
முன்னதாக தற்கொலைக்கான காரணம் குறித்து பெண் விமானி ஏதேனும் கடிதம் எழுதி வைத்துள்ளாரா என்று போலீசார், அவர் தங்கியருந்த அறை முழுவதும் சோதனை செய்தனர். ஆனால் அப்படி எந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றவில்லை. விமானி சிருஷ்டி துலி, அவரது காதலன் ஆதித்யா பண்டிட்டும் இரண்டு வருடங்களுக்கு முன்பு விமான ஓட்டுநர் லைசென்ஸ் பெறுவதற்காக பயிற்சிக்கு சென்ற போது சந்தித்துள்ளார்.
அப்போது ஏற்பட்ட பழக்கம் பின்னாளில் காதலாக மாறி உள்ளது. பயிற்சி முடித்து சிருஷ்டி துலி மும்பைக்கு வேலை நிமிர்த்தம் காரணமாக வந்துள்ளார். இருவரும் லிவ் இன் ரிலேசன்ஷிப்பில் இருந்துள்ளார்கள். இந்நிலையில் ஆதித்யா பண்டிட் தனது காதலி சிருஷ்டி துலி வசித்து வந்த அந்தேரி அடுக்குமாடியில் சம்பவம் நடப்பதற்கு ஐந்து முதல் ஆறு நாட்களுக்கு முன்பு வசித்தாராம். காதலியை அடிக்கடி பொதுஇடங்களில் வைத்து அசிங்கப்படுத்தியதும், அசைவம் சாப்பிடுவதை நிறுத்துமாறு கூறி அடிக்கடி துன்புறுத்தினாராம். இதனால் இறந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மும்பை போலீசார் பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 108ன் (தற்கொலைக்கு தூண்டுதல்) கீழ் காதலன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications