'இந்தியாவிலேயே மிகப் பெரிய ஊழல்' நிர்மலா சீதாராமன் ராஜினாமா கோரி வெடிகுண்டு மிரட்டல்- 3 பேர் கைது!
மும்பை: இந்திய வரலாற்றிலேயே மிகப் பெரிய ஊழல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி இயக்குநர் சக்திகாந்த தாஸ் இருவரும் ராஜினாமா செய்யாவிட்டால் மும்பையில் 11 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்ததாக குஜராத்தை சேர்ந்த 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி தலைமை அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமையன்று ஒரு இ மெயில் வந்தது. கிலாபத் இந்தியா Khilafat India என்ற பெயரில் அனுப்பி வைக்கப்பட்ட அந்த இ மெயிலில், இந்திய வரலாற்றிலேயே மிகப் பெரிய ஊழலை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்துள்ளனர். இந்த இருவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும். இருவரது ஊழல்களுக்கு முழுமையான ஆணித்தரமான ஆதாரங்கள் இருக்கின்றன.

நிர்மலா சீதாராமனும் சக்திகாந்த தாஸும் பதவியை ராஜினாமா செய்யாவிட்டால் ரிசர்வ் வங்கி தலைமை அலுவலகம், ஹெச்டிஎப்சி அலுவலகம், ஐசிஐசிஐ வளாகம் உள்ளிட்ட 11 இடங்களில் பிற்பகல் 1.30 மணிக்கு குண்டுகள் வெடிக்கும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
குண்டு வெடிப்புகள், பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொண்ட மும்பைக்கு இந்த வெடிகுண்டு மிரட்டல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மிரட்டல் விடுக்கப்பட்ட 11 இடங்களிலும் போலீசார் துருவி துருவி சோதனை நடத்தினர் ஆனால் இந்த சோதனையில் வெடி பொருட்கள் எதுவும் சிக்கவில்லை.
இதனையடுத்து மின்னஞ்சலை அனுப்பியது யார் என மும்பை போலீசார் விசாரணை நடத்தினர் . இந்த விசாரணையில் குஜராத் மாநிலத்தில் இருந்த் இந்த மெயில் அனுப்பி வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தற்போது வரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என மும்பை போலீசார் தெரிவித்தனர். இந்த 3 பேரிடமும் துருவி துருவி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த 3 பேருக்கும் பயங்கரவாத இயக்கங்களுக்கும் தொடர்புள்ளதா? எனவும் மும்பை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications