மும்பையில் கொன்று புதைக்கப்பட்ட பிரபல மாடல்.. 2 மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீஸ்.. திக் புலனாய்வு!
மும்பையை சேர்ந்த பிரபல மாடல் மான்சி தீக்ஷித் இன்று பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
Recommended Video

மும்பை: மும்பையை சேர்ந்த பிரபல மாடல் மான்சி தீக்ஷித் இன்று பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
மும்பையை சேர்ந்தவர் மான்சி தீக்ஷித். 20 வயது ஆகும் இவர் சில விளம்பர படங்களில் நடித்துள்ளார். அதே போல சில பாலிவுட் படங்களிலும் சைட் ரோலில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் இன்று இவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இவரை கொலை செய்த நபரை போலீசார் 2 மணி நேரத்தில் பிடித்து இருக்கிறார்கள்.

ஒன்றாக இருந்தனர்
மான்சி தீக்ஷித் மும்பையின் அந்தேரி பகுதியில் வசித்து வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த முஸாம்மில் சையத், பேஸ்புக் மூலம் இந்த பெண்ணிற்கு அறிமுகம் ஆகியுள்ளார். அவ்வப்போது இவர்கள் சந்தித்து வந்துள்ளனர். 6 மாதமாக இவர்கள் பழகி இருக்கிறார்கள்.

கொலை செய்தார்
இந்த நிலையில், இன்று அதிகாலை மான்சியை சந்திக்க முஸாம்மில் சையத் அவளது வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த வீட்டில் இவர்கள் இருவருக்கும் சண்டை வந்துள்ளது. இதில் மான்சியை முஸாம்மில் சையத் கொலை செய்துள்ளார். அதோடு வெட்டி துண்டு துண்டாக கட்டி, சூட்கேசில் அடைத்து இருக்கிறார்.

தப்பித்தார்
பின் டாக்சி பிடித்து அந்த சூட்கேஷை எடுத்துக் கொண்டு மும்பை ஏர்போர்ட் சென்றுள்ளார். பாதி வழியில் மலாத் மைனஸ் ஸ்பேஸ் என்ற காட்டுப்பகுதியில் வண்டியை நிறுத்த சொல்லிவிட்டு, காட்டிற்குள் சென்று சூட்கேஷை புதைத்துள்ளார். அதோடு வேறு பக்கமாக ஓடி தப்பித்து சென்றுள்ளார்.

தகவல் கொடுத்தார்
இவருக்காக காத்திருந்த டாக்சி ஓட்டுநர் சந்தேகம் வரவே போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். அங்கு வந்த போலீஸ் மோப்ப நாய் மூலம் தேடி உள்ளது. தேடுதலின் முடிவில் மான்சியின் உடல் கிடைத்தது. இதையடுத்து காட்டை சுற்றி இருந்த அனைத்து கேமராக்களையும் போலீஸ் சோதனை செய்தது.

திக் திக்
அதை வைத்து, முஸாம்மில் சையத் தப்பித்து ஓடிய ஆட்டோவை கண்டுபிடித்தனர். அந்த ஆட்டோ ஓட்டுனரை விசாரித்து முஸாம்மில் சையத் எங்கு இறங்கினார் என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள். அவர் இறக்கிவிடப்பட்ட அந்தேரியில் ஒரு தெருவில் அப்போது இயங்கி கொண்டிருந்த சிசிடிவி கேமராக்களை வைத்து சோதனை செய்தனர்.

2 மணி நேரம்தான்
கடைசியில் முஸாம்மில் சையத் வீடு ஒன்றுக்குள் செல்வதை கண்டுபிடித்தனர். உடனே அங்கு போலீஸ் சென்றது. 2 மணி நேரத்தில் அவனை போலீசார் பிடித்தனர். போலீசிடம் முஸாம்மில் சையத் கொலை செய்ததை ஒப்புகொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications