வேகமாக வெளியேறுங்கள்.. மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த அரசு.. மும்பையில் தொடரும் தீவிர கனமழை!
மும்பையில் இன்று அதி தீவிர கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து இருப்பதால் அங்கு இருக்கும் மக்கள் பலர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
Recommended Video
மும்பை: மும்பையில் இன்று அதி தீவிர கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து இருப்பதால் அங்கு இருக்கும் மக்கள் பலர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே, மஹாராஷ்டிராவில் தீவிரமாக மழை பெய்து வருகிறது. அதிலும் கடந்த நான்கு நாட்களாக மும்பையில் மிக தீவிரமான மழை பொழிந்து வருகிறது.
மும்பையில் இதனால் மொத்தமா இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஒரு வாரத்திற்கு இதேபோல் தீவிரமாக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை எப்படி
மும்பையில் கடந்த மூன்று நாட்களாக தீவிர கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு உள்ளூர் போக்குவரத்து மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளது. 11 விமானங்கள் இதுவரை மொத்தமாக சேவை துண்டிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் உள்ளூர் ரயில் சேவை மொத்தமாக நிறுத்தப்பட்டுள்ளது.

எப்படி துண்டிப்பு
மழை நீர் சாலை முழுக்க தேங்கி இருப்பதால், மும்பையில் இருக்கும் பல பகுதிகளுக்கு மீட்பு குழுவினர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மீட்பு படையை சேர்ந்த யாரும் செல்ல முடியாத அளவிற்கு சியான், மாதுங்கா, மஹீம் , அந்தேரி, மலாட், தாஹிசார் ஆகிய பகுதிகள் நீரில் மூழ்கி உள்ளது.

மீட்பு படை
இங்கு தற்போது தேசிய பேரிடர் மீட்பு படையினர் களமிறங்கி மீட்பு பணியில் ஈடுப்பட்டு வருகிறார்கள். மும்பையில் நேற்று இரவு முழுக்க மழை பெய்தது. நேற்று பல இடங்களில் 200 செமிக்கும் அதிகமாக மழை பெய்தது. அந்தேரி பகுதியில் 225 செமிக்கும் அதிகமாக மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

இன்றும் பெய்யும்
மும்பையில் இன்று அதிதீவிர கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் மும்பைக்கு இன்றும் நாளையும் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போதும் அங்கு தீவிரமாக மழை பெய்து வருகிறது.

என்ன எச்சரிக்கை
மும்பையில் இன்று அதி தீவிர கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து இருப்பதால் அங்கு இருக்கும் மக்கள் பலர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்களை வேகமாக அவர்களின் இருப்பிடங்களை விட்டு வெளியேறும்படி மும்பை நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது .
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications