Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடலாக மாறிய மும்பை ஏர்போர்ட்.. கப்பலாக மாறிய விமானங்கள்.. வீடியோ!

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையில் பெய்த கனமழை காரணமாக மும்பை விமான நிலையம் கடலாகவும், அங்கு நிறுத்தப்பட்டுள்ள விமானங்கள் கப்பலாகவும் மாறி இருக்கிறது. கனமழை காரணமாக சுமார் 250 விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவதோடு, விமான நிலையத்தின் ரன் வே முழுக்க மழைநீர் தேங்கி நிற்கிறது.

இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் மும்பைக்கு ரெட் அலர்ட் வார்னிங் கொடுக்கப்பட்டிருந்தது. அதற்கேற்ப கடந்த சில நாட்களாகவே கனமழை வெளுத்து வாங்கியது. நேற்று மட்டும் 8 மணி நேரத்தில் 177 செமீ மழை பெய்தது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தனியார் ஊழியர்கள் பலரும் ஒர்க் ஃப்ரம் ஹோம் முறையில் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Mumbai Rains Mumbai Mumbai Airport Rains Weather

இந்த கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்பதால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மும்பையில் பெய்த கனமழை காரணமாக 6 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 100க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கனமழைக்கு மும்பை விமான நிலையமும் தப்ப முடியவில்லை.

கனமழை காரணமாக சுமார் 250 விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மும்பை விமான நிலையத்தின் ரன் வே முழுக்க மழைநீர் தேங்கி நிற்பதால், மும்பை விமான நிலையமே கடல் போலவும், அங்கு நிறுத்தப்பட்டுள்ள விமானங்கள் கப்பல் போலவும் காட்சி அளிக்கின்றன. அதேபோல் மும்பையின் கோரேகான் ஓபராய் மால் முன்பாக தேங்கி நிற்கும் மழைநீரில் சிறுவர்கள் நீச்சல் அடித்து வருகின்றனர்.

மும்பையின் மிகமுக்கியமான பகுதியான அந்த மால் முன்பாகவே இவ்வளவு நீர் தேங்கி நிற்பது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் தானே பகுதியில் உள்ள சுரங்கப் பாதை ஒன்றில் மழைநீரில் கார் சிக்கியது. இதனால் காரில் இருந்தவர்கள் உதவிக்கு குரல் கொடுத்த போது, அங்கிருந்த 2 பேர் உடனடியாக மழைநீரில் நீச்சல் அடித்து உதவி செய்தனர். இந்த காட்சி சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+