மும்பையில் அதிர்ச்சி.. ஒரே நாளில் 2,510 பேருக்கு கொரோனா உறுதி- 82% அதிகரிப்பு!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இன்று ஒரே நாளில் 2,510 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பையில் நேற்றைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைவிட 82% அதிகமாகும்.
இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி வருகிறது. ஓமிக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மட்டும் இன்று ஒரே நாளில் 2,510 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. முந்தைய நாளை ஒப்பிடுகையில் இது 82% அதிகமாகும். மேலும் 251 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
மும்பையில் கொரோனாவால் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். தற்போதைய நிலையில் மும்பையில் 8060 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மும்பையில் இதுவரை 16,375 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
முன்னதாக மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில அமைச்சர் ஆதித்ய தாக்கரே, கடந்த வாரம் ஒருநாள் கொரோனா பாதிப்பு 150 ஆக இருந்தது. ஆனால் இன்றைக்கு ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை 2,000-த்தை தாண்டும் என கூறியிருந்தார்.
மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோபே கூறுகையில், மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பது மிக மோசமான சூழ்நிலையை வெளிப்படுத்துகிறது. ஆகையால் பொதுமக்களும் அதிகாரிகளும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கடந்த வாரம் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 5,000 முதல் 6,000 வரை இருந்தன.
Recommended Video
ஆனால் நேற்று 11,492 ஆக்டிவ் கேஸ்கள் பதிவாகின. இன்று ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 20,000-த்தை தாண்டக் கூடும் என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications