சோப்பும் ஆடம்பர பொருள்.. வேலையில்லை.. உணவுமில்லை, துயரம் மட்டுமே மிச்சம்.. கண்ணீரில் தாராவி மக்கள்
மும்பை : தாராவியில் வேலையில்லாமல் தவிக்கும் மக்கள் அடுத்த வேலை உணவுக்கு மற்றவர்களிடம் கையேந்தும் நிலையில் இருப்பதாகவும் , எங்கும் துக்கமே மிஞ்சி இருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
Recommended Video
ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான மும்பையின் தாராவி கொரோனா வைரஸ் ஊரடங்கால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுஒருபுறம் எனில் கொரோனா பாதிப்பும் அங்கு வேகமாக அதிகரித்து வருகிறது. தாராவியில் அதிகம் வசிக்கும் தமிழர்கள் உள்பட மக்கள் அனைவரும், உணவுக்காகவும் யாராவது பணம் உதவுவார்களா என்று நன்கொடைக்காகவும் காத்திருக்கிறார்கள். மார்ச் 25ம்தேதி தொடங்கிய ஊரடங்கு அந்த மக்களை மிகப்பெரிய கவலைக்குள் தள்ளியுள்ளது.
தாராவியில் வசிக்கும் நஜ்மா முகமது ஒருஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார். அந்த கடை தற்போது மூடப்பட்டுள்ளதால் வேலை இல்லாமல் பணமும் இல்லாமல் தவிக்கிறார். இதுபற்றி அவர் கூறுகையில், "நான் வேலைக்கு வெளியே சென்றபோது நான் என் குழந்தைகளுக்கு உணவளித்தேன், ஆனால் இப்போது எனக்கு வேலையும் இல்லை, துயரம் மட்டுமே இருக்கிறது" என்று கூறினார். அவரும் அவரது மகன் மற்றும் இரண்டு மகள்கள் அண்டை வீட்டார் வழங்கும் உணவை நம்பியுள்ளனர்.

மோசமான சுகாதாரம்
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதி என்று அழைக்கப்படும் தாராவி, கொரோனாவை கட்டுப்படுத்தப்பட வேண்டிய கடினமான இடமாகும். அங்குள்ள மக்கள் அடர்த்தி மற்றும் மோசமான சுகாதாரம் காரணமாக புதிய கொரோனா வைரஸ் மிகவும் பாதிக்கப்படக்கூடிய இடமாக உள்ளது.

சுத்தமான தண்ணீர்
நூற்றுக்கணக்கான மக்கள் சில நேரங்களில் ஒரே குளியலறையைப் பகிர்ந்து கொள்கிறார்கள். சுத்தமான தண்ணீர் கிடைப்பதற்கான எந்த உத்தரவாதம் இல்லை. சோப்பு ஒரு ஆடம்பரமான பொருளாக அங்கு மாறிவிட்டது. இந்நிலையில் வடகிழக்கு மாநிலமான ஜார்க்கண்டிலிருந்து வந்து தாராவியில் வசிக்கும் நம்சந்த் மண்டல் என்ற கூலி தொழிலாளி கூறுகையில், "எதுவும் நடக்கலாம். இந்த அறையில் ஒன்பது பேர் இருக்கிறோம். நாங்கள் அனைவரும் ஆபத்தில் இருக்கிறோம்" என்றார்.

கவலை அளிக்கும் சூழல்
தாராவிக்குள் இதுவரை 138 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இந்த எண்ணிக்கை அதிகமாகும் என்றே நிபுணர்கள் அஞ்சுகின்றனர். மும்பையின் குடிசைப்பகுதிகளைப் பற்றி வைராலஜிஸ்ட் ஷாஹித் ஜமீல் கூறுகையில், இது நகரத்தின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 12 லட்சம் பேர் அங்கு வசிக்கிறார்கள். எனவே இப்போதைய சூழலை நினைத்து நான் மிகவும் கவலைப்படுகிறேன் என்றார்.

சிறிய அறையில் மக்கள்
கொரோனாவால் பதற்றத்தில் உள்ள தாராவி குடியிருப்புவாசிகள், முகமூடிகளுக்குப் பதிலாக கைக்குட்டை அல்லது சட்டைக்காலரை வெட்டி முகத்தில் கட்டியுள்ளனர். சிலர் வண்டிகள், மிதிவண்டிகள் மற்றும் கம்புகளை பயன்படுத்தி சந்து பாதைகளை தடை செய்துள்ளனர். அறிகுறிகள் வெளியாட்களை விலகி இருக்க வேண்டும் என்று எச்சரிக்கிறார்கள். இருப்பினும், பல குடியிருப்பாளர்கள் சிறிய அறைகளில் தங்களை நீண்ட நாள் அடைத்து வைக்க முடியாது என்று கூறுகிறார்கள். வெவ்வேறு ஷிப்டுகளில் பணிபுரியும் தொழிலாளர்களால் அந்த அறைகள் பகிரப்படுகின்றன. இப்போது லாக்டவுனால் எல்லோரும் ஒரே இடத்தில் முடங்கி கிடக்கிறார்கள். .

தராவியின் நிலை
தாராவியில் இன்னும் கொஞ்சம் உள்ளே சென்று பார்த்தால் மக்கள் முறைசார வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சில பெரியவர்கள் செஸ் விளையாடுவதற்கோ அல்லது செல்போன்களில் வீடியோக்களைப் பார்ப்பதற்கோ நேரத்தைக் செலவழிக்கிறார்கள். குழந்தைகள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். ஒரு தையல்காரர் தனது சிறிய கடையை அதிகாலையில் திறக்கிறார். போலீஸ் வருவதற்குள் கடையை அடைக்கிறார். கொஞ்சம் பணம் சம்பாதிக்க விரும்பி இப்படி செய்தாக கூறுகிறார்.

மக்கள் கேட்பதில்லை
இதனால் ஊரடங்கை செயல்படுத்துவது இங்கு மிகவும் கடினம் என்றும் யாரும் நாங்கள் சொல்வதை காது கொடுத்து கேட்பதில்லை என்று தாராவியில் உள்ள ஒரு காவல்துறை அதிகாரி தேவனை தெரிவித்தார், சில வங்கி ஊழியர்கள் நண்பர்களுடன் சிறப்பு பாஸைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் அவர்கள் அதை வைத்து வெளியே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். தாராவியில் லாக் டவுன் மீறுபவர்களை வெயிலில் உட்கார வைப்பது, உக்கி போட வைப்பது மற்றும கம்பால் அடிப்பது போன்ற தண்டனைகளை போலீஸ் அதிகாரிகள் அளித்திருக்கிறார்கள் . ஆனால் ஊரடங்கை மதித்து வீட்டுக்குள் முடங்க முடியாமல் மக்கள் பத்துக்கு பத்து ரூமில் தவிக்கிறார்கள். வேலையும் இல்லை. உணவும் இல்லை. மறு பக்கம் தொற்று நோயும் மிரட்டுகிறது. உண்மையில் தாராவியின் இன்றை நிலை கண்ணீரை வரவழைக்கும் ஒன்றாக உள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications