சத்தமே இல்லாமல் ரூ.35 கோடி அபேஸ்.. கதறி துடிக்கும் 72 வயது முதியவர்.. மொத்த சொத்தும் போச்சு
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் 72 வயதான முதியவர் ஒருவரிடம் டிரேடிங் எனச் சொல்லி பங்குச்சந்தை மோசடி நடந்துள்ளது. அந்த நிறுவனத்தைச் சேர்ந்த சிலர் இவரிடம் மோசடி செய்துள்ளனர். அதில் அந்த முதியவர் ரூ.35 கோடி இழந்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
பொதுவாகவே வயதாகும்போது நம்மால் எல்லா விஷயங்களையும் சரியாக டிராக் செய்ய முடியாது. அந்த காலகட்டத்தில் தான் இளைஞர்களின் உதவி நமக்கு தேவைப்படும். நமது நாட்டில் பெரும்பாலும் வயதானவர்களுக்கு இளைஞர்கள் உதவவே செய்வார்கள். ஆனால், சில நேரங்களில் முதியவர்களைக் குறிவைத்து ஏமாற்றம் சம்பவங்களும் நடக்கவே செய்கிறது. அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

முதியவர்
மும்பையைச் சேர்ந்த 72 வயதான பாரத் ஹரக் சந்த் ஷா என்பவர் பங்குச் சந்தை மோசடியில் ₹35 கோடி இழந்துள்ளார். மடுங்கா மேற்கு பகுதியைச் சேர்ந்த இவர், ஷேர் மார்கெட் நிறுவனத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக டிரேட் செய்துள்ளார். ஆனால், விஷயம் என்னவென்றால் இவரது கணக்கை வைத்து அந்த நிறுவன ஊழியர்களே டிரேட் செய்துள்ளனர். இந்த மோசடியில் தான் ஷா ₹35 கோடி இழந்துள்ளார்.
பரெல் என்ற பருதியில் கேன்சர் நோயாளிகள் தங்கும் ஹாஸ்டலை நடத்தி வருபவர் தான் இந்த ஹரத் சந்த் ஷா.. இவரது தந்தை சில பங்குகளில் முதலீடு செய்திருந்த நிலையில், தந்தை மறைவுக்குப் பிறகு 1984ல் அந்த பங்குகள் இவருக்கு கிடைத்தது. இருப்பினும், பங்குகளைப் பற்றி பெரிதாகத் தெரியாததால் இந்த தம்பதி அதைக் கண்டுகொள்ளவில்லை.
டிரேடிங் நிறுவனம்
இந்தச் சூழலில் தான் கடந்த 2020ல் பங்குகள் அனைத்தும் உச்சத்தில் இருப்பதால் தந்தையின் பங்குகளை செக் செய்யுமாறு நண்பர் ஒருவர் சொல்லி இருக்கிறார். அதைக் கேட்டு இவரும் கடந்த 2020ல் தனக்கும் தனது மனைவிக்கும் குளோப் கேபிடல் மார்க்கெட்ஸ் என்ற நிறுவனத்தில் டிமாட் கணக்கைத் தொடங்கியுள்ளார். தந்தையிடம் இருந்து கிடைத்த பங்குகளை இந்த கணக்கிற்கு மாற்றியுள்ளார்.
தொடக்கத்தில் எல்லாம் சரியாகவே இருந்துள்ளது. கம்பெனியில் இருந்து சிலர் சந்த் ஷாவை தொடர்பு கொண்டனர். கூடுதல் முதலீடு தேவையில்லை என்றும், இந்த பங்குகளைப் பிணையமாக (collateral) வைத்து வர்த்தகம் செய்யலாம் என்று சொல்லியுள்ளனர். மேலும், ஷாவுக்கு உதவத் தனியாக அக்ஷய் பரியா மற்றும் கரண் என இருவரை நியமித்துள்ளனர். அதன் பிறகே எல்லாம் மாறியுள்ளது.
என்ன நடந்தது?
முதலில் அவர்கள் தினசரி கால் செய்து, எந்த பங்குகளை வாங்கலாம் ன்பை ஷாவுக்கு அறிவுறுத்தினர். இருப்பினும், சில வாரங்களிலேயே நேரடியாக வீட்டிற்கு வருவது.. அவரது லேப்டாப்பில் இருந்தே மெயில் அனுப்புவது உள்ளிட்ட வேலைகளையும் செய்துள்ளனர். ஷா அவர்களை முழுமையாக நம்பி இருக்கிறார். அவர்கள் கேட்கும்போதெல்லாம் ஓடிபிக்களை சொல்லி இருக்கிறார். எப்போது கேட்டாலும் அவ்வளவு லாபம், இவ்வளவு லாபம் என்றே சொல்லி இருக்கிறார்கள். கடந்த 2020 முதல் 2024 வரை அவருக்கு அளிக்கப்படும் ஆண்டு அறிக்கையிலும் லாபம் என்றே இருந்துள்ளது. இதனால் ஷா பெரிதாக எதையும் யோசிக்கவில்லை.
இந்தச் சூழலில் தான் கடந்த 2024ல் மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குளோப் கேபிடல் நிறுவனத்தில் இருந்து ஒருவர் ஷாவுக்கு கால் செய்துள்ளார். உங்கள் டிரேடிங்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக ₹35 கோடி கட்டுங்கள். இல்லை என்றால் பங்குகள் அனைத்தையும் விற்றுவிடுவோம் என சொல்லியுள்ளனர். அப்போது தான் ஷாவுக்கு தன்னை சுற்றி மோசடி நடந்துள்ளதைக் கண்டுபிடித்துள்ளார். அதாவது ஷாவுக்கு தெரியாமலேயே அந்த இரு ஊழியர்களும் பல டிரேட்களை செய்துள்ளார். அதில் தான் பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எஞ்சிய சொத்துகளும் போய்விடுமோ என பயந்த ஷா, தனது சொத்துகளை விற்று ₹35 கோடி கடனையும் செலுத்தினார்.
போலீசில் புகார்
குளோப் நிறுவனத்திற்கு சென்று ஒர்ஜினல் அறிக்கையை டவுன்லோடு செய்து பார்த்துள்ளார். அப்போது தான் அதற்கும் தனக்கு அனுப்பப்பட்ட லாப அறிக்கைக்கும் எந்தளவுக்கு வித்தியாசம் இருக்கிறது என்பதை அவர் பார்த்துள்ளார். அப்போது தான் அவர் அதிர்ந்து போய்விட்டார். தனக்கே தெரியாமல் தனது கணக்கை வைத்து இவ்வளவு பெரிய மோசடி நடந்திருப்பதால் அதிர்ந்தார். இது தொடர்பாக ஷா அளித்த புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications