பாலத்திற்கு கீழே மனநலம் பாதித்த பெண் பலாத்காரம் - சீரழித்த கொடூரன் கைது
மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றித்திரிந்த பெண்ணை இழுத்துக்கொண்டு போய் பலாத்காரம் செய்த கொடூரனை மும்பை போலீசார் கைது செய்து உள்ளனர்.
மும்பை: தூணிக்கு துணியை சுத்தினாலே தூக்கி பாக்கிற காலமா போச்சு... மனநலம் பாதிக்கப்பட்டு தான் யாரென்பதே உணராமல் திரியும் பெண்ணை கூட விட்டு வைக்காமல் சீரழிக்கும் கொடூரர்கள் இங்கே இருக்கத்தான் செய்கின்றனர். பால்குடி மாறாத பச்சிளம் பிள்ளையை கூட விட்டு வைக்காதவர்கள் துணி கிழிந்து அங்கம் தெரிய தெருவில் சுற்றித்திரியும் பெண்ணையா விட்டு வைப்பார்கள். அதுவும் சமூக ஆர்வலர் போர்வையில் சுற்றித்திரியும் காமுகன் ஒருவன்தான் மகாராஷ்டிராவில் மனநலம் பாதித்த பெண்ணை சீரழித்துள்ளான்.
சந்த் நகரில் உள்ள மேம்பாலத்தின் கீழே மறைவான பகுதியில் நடுத்தர வயதுடைய ஒரு பெண்ணிடம் வாலிபர் ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்டிருந்தார். அந்த பெண் அந்த நபரின் கைகளை தட்டி விட்டாலும் அந்த நபர் விடுவதாக இல்லை. இதை அந்த வழியாக சென்ற வழிப்போக்கர் ஒருவர் பார்த்து போலீசில் தகவல் கூறினார்.

தகவலை கேட்ட உடனேயே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த இளைஞரை பிடித்து விசாரித்ததோடு பாதிக்கப்பட்ட அந்த பெண்ணையும் மீட்டனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரியவந்தது.
பிடிபட்ட நபரின் பெயர் பிரவீண் சதானந்த் ஜாதவ் என்பதும். 35 வயதாகும் இந்த நபர் சமூக ஆர்வலர் போர்வையில் சுற்றித்திரியும் கயவன் என்றும் தெரியவந்தது.
விரார் தெரு சாலையில் சுற்றிக்கொண்டிருந்த அந்த பெண்ணை கவனித்த பிரவீண் தனது பைக்கில் கூட்டிக்கொண்டு வந்துள்ளார். பாலத்தின் கீழே மறைவுப்பகுதியில் அந்த பெண்ணை கொண்டு போய் அசிங்கம் செய்துள்ளார். அந்த பெண் அலறும் சத்தம் கேட்டு அந்தப்பக்கம் வந்த ஒரு நபர் போலீசில் தகவல் கூறியுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இந்திய தண்டனைச்சட்டம் 363, 376 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து பிரவீணை கைது செய்தனர்.
தான் யாரென்றே அறியாமல் மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் திரியும் பெண்ணைக் கூட விடாமல் விரட்டி வேட்டையாடும் கயவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இந்த சம்பவம் மும்பை பகுதியில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications