கள்ளக்காதல்! பாபநாசம் பாணியில்! கணவரை கொன்று வீட்டுக்குள்ளேயே புதைத்த மனைவி! டைல்ஸில் கிடைத்த துப்பு
மும்பை: மும்பையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்து வீட்டுக்குள்ளேயே மனைவி புதைத்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. த்ரிஷயம், பாபநாசம் படங்களை போல் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது பெரும் சோகத்தை கொடுத்துள்ளது.
மும்பையிலிருந்து 70 கி.மீ. தொலைவில் நாலசோப்ரா எனும் இடம் உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்தவர் விஜய் சவான் (35). இவரது மனைவி கோமல் சவான். இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகன் இருக்கிறார். கோமல் சவானுக்கும் மனு என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

இது குறித்து அரசல் புரசலாக விஜய்க்கு தெரியவந்தது. உடனே அவர் தனது மனைவி கோமலை கண்டித்தார். "நமக்கு குழந்தை இருக்கிறான். இப்படி தவறு செய்யக் கூடாது. இந்த தவறை இனியும் செய்யாதே" என அறிவுறுத்தியிருந்தாராம்.
தொடர்ந்த கள்ளக்காதல்
கணவர் சொல்லும்போது அவர் பேச்சை கேட்பது போல் இருந்துவிட்டு பின்னர் மனுவுடனான கள்ளக்காதலை, கோமல் தொடர்ந்தார். காடு, வயல்வெளி, ஒதுக்குப்புறமான இடம் என கள்ளக்காதலை வளர்த்த இவர்கள், கடைசியாக தங்கள் வீட்டிலேயே வளர்க்கத் தொடங்கினர்.
உல்லாசம்
அதாவது கணவர் இல்லாத நேரங்களில் மனுவை வீட்டிற்கு வரவழைத்த கோமல், அவருடன் உல்லாசமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. அது போல் இருவரும் சேர்ந்து வெளியிலும் ஊர் சுற்றியதை அக்கம்பக்கத்தாரும் உறவினர்களும் பார்த்து, விஜய்யிடம் , "கோமலுக்கு புத்திமதி கூறி அடக்கி வைக்குமாறு" தெரிவித்தனராம்.
சண்டையிட்ட விஜய்
இதனால் விஜய் மனமுடைந்து, கோமலிடம் சண்டையிட்டுள்ளார். இதையடுத்து தனது கள்ளக்காதலை எங்கே சந்திக்க விடாமல் போய்விடுவாரோ என கோமல் அஞ்சியுள்ளார். இதனால் தனது கள்ளக்காதலுக்கு தடையாக இருக்கும் கணவரை கொலை செய்ய முடிவு செய்தாராம். இதை கள்ளக்காதலனிடம் கூட தெரிவித்துள்ளார்.
கோமலை பார்க்க சென்ற மனு
இதையடுத்து விஜய் வீட்டில் இருந்த போதே மனு அங்கு கோமலை பார்க்க போயிருக்கிறார். அப்போது ஆத்திரமடைந்த விஜய், "மனுவை வெளியே போக சொல்" என கோமலிடம் சொல்லிக் கொண்டிருந்த போது பின்பக்கமாக இருந்து விஜய்யின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் நிலைக்குலைந்த விஜய், அப்படியே கீழே சரிந்துவிட்டார்.
பலத்த காயம்
அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் மனு தாக்கியதில் விஜய்யின் உடலில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. பின்னர் மனுவும் கோமலும் ஒரு ஆயுதத்தை கொண்டு விஜய்யின் உடலை கண்டந்துண்டமாக வெட்டினர்.
வெட்டிய உடல்
இதையடுத்து வெட்டிய உடலை அப்புறப்படுத்த என்ன செய்வது என யோசித்த கள்ளக்காதலர்கள். வீட்டில் இருந்த டைல்ஸை பெயர்த்துவிட்டு அந்த உடல் பாகங்களை அதில் புதைத்துவிட்டனர். ஆனால் இவர்கள் பலமாக தரையை இடித்ததால் டைல்ஸ் உடைந்து போய்விட்டது. இதனால் புதிய டைல்ஸை வாங்கி புதைத்திருந்தனர்.
விஜய்யை தேடிய சகோதரர்கள்
இந்த நிலையில் விஜய்யை தேடி அவருடைய சகோதரர்கள் வீட்டுக்கு வந்தனர். அப்போது கடந்த சில தினங்களாகவே விஜய்யை காணவில்லை என கோமல் தெரிவித்தாராம். போலீஸில் கூட புகார் கொடுக்காமல் கோமல் இருப்பதாலும், அவருக்கு கள்ளக்காதல் இருப்பதை அறிந்ததாலும் வீடு முழுக்க தேடினர்.
புதிய டைல்ஸ்
அப்போது ஒரு இடத்தில் டைல்ஸ் புதிதாக இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விஜய்யின் சகோதரர்கள் அந்த இடத்தை தோண்டியுள்ளனர். அப்போது புதிதாக பூசியதும் தெரியவந்ததை அடுத்து ஆழமாக தோண்டனர். தோண்ட தோண்ட துர்நாற்றம் வீசியது. ஆழமாக தோண்டிய போது விஜய்யின் உடல் இருந்தது. உடனே விஜய்யின் சகோதரர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
பிரேத பரிசோதனை
அவர்கள் வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து கோமலிடம் விசாரணை நடத்திய போது விஜய்யை கொன்றதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவருடைய கள்ளக்காதலன் மனுவையும் போலீஸார் கைது செய்தனர். மலையாளத்தில் த்ரிஷ்யம் படத்தில் தனது மகளை ஆபாசமாக வீடியோ எடுத்து படுக்கைக்கு அழைத்த இளைஞரை, அந்த பெண்ணின் தந்தை மோகன்லால் கொன்று காவல் நிலைய கட்டுமான இடத்தில் புதைத்துவிடுவார். இந்த படத்தின் ரீமேக் தமிழில் பாபநாசம் என வெளியானது. அதில் நடிகர் கமல்ஹாசன், நடிகை கவுதமி ஆகியோர் நடித்திருந்தனர்.












Click it and Unblock the Notifications