மும்பையில் ஒரு "நிர்பயா".. டெம்போவில் பலாத்காரம்.. சிகிச்சை பலனின்றி பெண் பலி
மும்பை: மும்பையில் பெண் ஒருவரை பலாத்காரம் செய்த கொடூரன் அவரது பிறப்புறுப்பில் இரும்பு கம்பியை செருகிவிட்டு சென்ற கொடூரம் நடந்ததை அடுத்து மிகவும் ஆபத்தாந நிலையில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண் பலியாகிவிட்டார்.
மும்பையின் சாகி நாகா பகுதியை சேர்ந்தவர் 32 வயது பெண். இவர் கைரானி சாலை அருகே சென்று கொண்டிருந்த போது டெம்போ டிரைவர் மோகன் சவுகான் (45) என்பவரால் கடத்தப்பட்டார்.
பின்னர் டெம்போவில் வைத்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்த மோகன், அவரது பிறப்பிறுப்பில் இரும்பு ராடை நுழைத்துவிட்டு சென்ற கொடூரம் அரங்கேறியுள்ளது.

தப்பிய பெண்
இதையடுத்து அந்த பெண்ணை அப்படியே போட்டுவிட்டு தப்பிவிட்டார். பின்னர் ரத்த வெள்ளத்தில் மிதந்த அப்பெண் அந்த வழியே வந்தவர்கள் இந்த பெண்ணின் நிலை குறித்து போலீஸாரிடம் தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அந்த பெண்ணை மீட்டு ராஜாவாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

டெம்போ டிரைவர் கைது
விசாரணையின் அடிப்படையில் டெம்போ ஓட்டுநர் மோகன் சவுகானை கைது செய்துள்ளனர். அவரது வாகனத்தில் ரத்தக் கறைகள் உள்ளன.இந்த சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பிருக்கலாம் என தெரிகிறது. அந்த பெண்ணின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று பலியாகிவிட்டார்.

நிர்பயா சம்பவம்
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு நிர்பயா என்ற பெண் ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு பலியானார். அவரது பிறப்புறுப்பிலும் கொடூரக்காரர்கள் இரும்பு ராடை நுழைத்து சித்ரவதை செய்துள்ளனர். சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த நிர்பயா சிகிச்சை பலனின்றி பலியாகிவிட்டார்.

பீதியில் உறைந்த மக்கள்
அதே போன்றதொரு சம்பவம் மும்பையில் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். மும்பை சம்பவம் குறித்து அந்த அந்தேரி கிழக்கு பகுதியில் உள்ள பெண்ணின் தாயிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில் குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் அவரை வீட்டை விட்டு வெளியேற சொன்னதால் அவர் இரவோடு இரவாக வீட்டை விட்டு வெளியே சென்றதாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications