அபார்ஷன்.. 7 மாத கர்ப்பம்.. யூடியூப் பார்த்து சிசுவை கலைத்து குழிதோண்டி புதைத்த பெண்.. மிரண்ட போலீஸ்

யூடியூப் வீடியோ பார்த்து தன் சிசுவை கலைத்துள்ளார் ஒரு இளம்பெண்

Subscribe to Oneindia Tamil

மும்பை: யூடியூப் வீடியோ பார்த்து தன்னுடைய சிசுவை இளம்பெண் கலைத்துள்ள சம்பவம் மஹாராஷ்டிராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

நாக்பூரை சேர்ந்த பெண்ணுக்கு 24 வயதாகிறது.. சாஹில் வஹாப் கான் என்பவரை காதலித்து வந்துள்ளார்.. 6 வருட காதல் இது.. சாஹிலுக்கு 31 வயதாகிறது.

ஆனால், சாஹில் அந்த பெண்ணையே திருமணம் செய்து கொள்வதாக கூறி, அவருடன் கட்டாய பாலியல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளார்.. இதனால் அந்த பெண் கர்ப்பமானார்...

 குழந்தை

குழந்தை

இதையடுத்து, சாஹிலிடம் விஷயத்தை சொல்லி, தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுள்ளார்.. ஆனால், சாஹிலுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதாம்.. குழந்தையும் இருக்கிறதாம்.. அதனால் 2வது திருமணம் செய்ய முடியாது என்று மறுத்துள்ளார்.. இதனால் அதிர்ந்து போன அந்த பெண், டாக்டரிடம் சென்று கருவை கலைக்க கேட்டுள்ளார்..

 7 மாத கர்ப்பம்

7 மாத கர்ப்பம்

ஆனால் 7 மாத கர்ப்பம் என்பதாலும் சிசு வளர்ந்து விட்டதாலும், இனிமேல் கருவை கலைக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். இதனால் மறுபடியும் சாஹிலிடம் ஓடினார் அந்த பெண்.. டாக்டர்கள் கர்ப்பத்தை கலைக்க முடியாது என்று சொல்லி விட்டதாக தெரிவித்துள்ளார்.. அதற்கு சாஹில், "டாக்டர்கள் செய்யாவிட்டால் என்ன, யூடியூப் வீடியோவை பார்த்து நீயாகவே உடனே கருவைக் கலைத்துவிடு" என்று கூறியுள்ளார்..

உயிரிழப்பு

உயிரிழப்பு

இதனால் அந்த பெண்ணும், யூடியூப் வீடியோவை பார்த்து மெல்ல மெல்ல கருவைக் கலைக்க முயற்சி செய்துள்ளார். ஒருவழியாக சிசுவை வெளியே எடுத்து விட்டார்.. தொப்புள் கொடியையும் வெட்டி எடுத்தார்.. ஆனால், அந்த சிசு உயிரற்று கிடந்தது.. பிறகு அதை எடுத்து கொண்டு போய் அவராகவே புதைத்துவிட்டார்.. இவ்வளவும் அந்த பெண்ணின் பெற்றோர் வெளியூருக்கு சென்ற நேரத்தில் செய்து முடித்துள்ளார்..

 புகார்

புகார்

அவர்கள் ஊரில் இருந்து திரும்பிய பிறகுதான், நடந்த சம்பவம் தெரியவந்தது.. இதனால் அதிர்ந்து போன பெற்றோர், சாஹில் மீது போலீஸில் புகார் தந்தனர்.. போலீசாரும் அந்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குபதிவு செய்து சாஹிலை கைது செய்தனர்.. பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர்.. அதில், சாஹில் தன்னை கட்டாயப்படுத்தி உறவு வைத்து கொண்டதாகவும், சில நேரங்களில் கூல்டிரிங்ஸ்-ல் மயக்க மருந்து கலந்து தந்து உறவு வைத்து கொண்டதாகவும் அந்த பெண் வாக்குமூலம் தந்தார்.

கைது

கைது

இந்த சம்பவம் குறித்து போலீசார் சொல்லும்போது, "சாஹில் டிரைவர் வேலை பார்ப்பவர், ஏற்கெனவே 2 முறை திருமணம் நடந்துள்ளது.. முதல் திருமணம் விவாகரத்து ஆகி உள்ளது.. 2வது மனைவிக்கு ஒரு மகன் இருக்கிறான்.. பாதிக்கப்பட்ட பெண்ணையும் திருமணம் செய்து கொள்வதாக சொல்லியே இவ்வாறு ஏமாற்றி உள்ளார்.. சிசுவின் உடல் புதைக்கப்பட்டதாக சொன்னதால், அங்கே தோண்டி பார்த்தோம்.. சிசு எதுவும் கிடைக்கவில்லை.. அது கிடைத்தால்தான், டிஎன்ஏ டெஸ்ட் மூலம் குற்றத்தை நிரூபிக்க இயலும்" என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+