Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'நான் சொல்லி தான் அஜித் பவார் பாஜக உடன் கைகோர்த்தாரா??' சரத் பவார் ஓபன் டாக்.. பரபர தகவல்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: கடந்த 2019இல் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அறிவுறுத்தல் பெயரிலேயே பாஜக உடன் அஜித் பவார் கூட்டணி அமைத்தாக தகவல் பரவி வரும் நிலையில், இது குறித்து சரத் பவார் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மகாராஷ்டிராவில் கடந்த 2019ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. பாஜக ஆளும் கட்சியாக இருந்து தேர்தலை எதிர்கொண்டது.

இந்தத் தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்துத் தேர்தலில் போட்டியிட்டது. அதேபோல மறுபுறம் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இணைந்து களமிறங்கியன.

 மகாராஷ்டிரா தேர்தல்

மகாராஷ்டிரா தேர்தல்

288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் அமையவில்லை. பாஜக தனிப்பெரும் கட்சியாக 105 இடங்களில் வென்றிருந்தது. சிவசேனா 56 இடங்களையும். தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களையும் காங்கிரஸ் 44 இடங்களையும் வென்றது. தேர்தலுக்கு முன்பு கூட்டணி அமைத்திருந்த பாஜக மற்றும் சிவசேனா கூட்டணிக்குப் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் இருந்தன.

 குடியரசுத் தலைவர் ஆட்சி

குடியரசுத் தலைவர் ஆட்சி

இருப்பினும், கூட்டணியில் அப்போது பிரச்சினை ஏற்படவே எந்தக் கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. தேர்தலுக்கு முன்பு வாக்குறுதி அளித்தபடி 2.5 ஆண்டுகள் முதல்வர் பதவியைப் பகிர பாஜக மறுப்பதாகக் கூறி சிவசேனா கூட்டணியை விட்டு வெளியேறியது. இதையடுத்து யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அப்போது ஒரு நாள் அதிகாலையில் திடீரென அஜித் பவார் தலைமையில் சில எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாகக் கூறி பாஜக ஆட்சி அமைத்தது.

 திடீர் பரபரப்பு

திடீர் பரபரப்பு

பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார். அதேபோல அஜித் பவார் துணை முதல்வராகப் பதவியேற்றார், இருப்பினும், தேசியவாத காங்கிரஸ் தலைமை இதை மறுத்தது. இதையடுத்து வெறும் சில மணி நேரங்களில் பாஜக அரசு கவிழ்ந்தது. சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை அமைத்து ஆட்சியைப் பிடித்தது. உத்தவ் தாக்கரே முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.

 சரத் பவார்

சரத் பவார்

அப்போது குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்த நிலையில், அதை நீக்குவதற்காக சரத் பவார் கொடுத்த ஐடியா தான் இது எனப் பலரும் தெரிவித்தனர். இதற்கு ஏற்றார்போல அஜித் பவாருக்கு மீண்டும் இந்தக் கூட்டணி ஆட்சியில் துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால், இப்படிப் பரவிய தகவல்களை சரத் பவார் தரப்பில் இதுவரை ஏற்றுக் கொள்ளவும் மறுக்கவும் இல்லை. இந்நிலையில், மராத்தி செய்தி நிறுவனம் நடத்திய கருத்தரங்கில் பங்கேற்ற அவர், இது தொடர்பாக மனம் திறந்து பேசியுள்ளார்.

 ஓபன் டாக்

ஓபன் டாக்

மராத்திய நாளிதழான லோக்சட்டா ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், "பாஜகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க அஜித் பவாரை நான் அனுப்பியிருந்தால், அந்த கூட்டணி தொடர்ந்து ஆட்சியில் இருந்து இருக்கும். அந்தக் கூட்டணி 5 ஆண்டுகள் ஆட்சியில் இருப்பதை நான் உறுதி செய்திருப்பேன். முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதும், அனுபவமுள்ள மற்ற அமைச்சர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர்" என்றார்.

 2024 தேர்தல்

2024 தேர்தல்

2024 மக்களவை தேர்தல் முடிவு வெளியான பிறகு, நீங்கள் பிரதமராக வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "எனக்கு அரசை வழிநடத்துவதை விட அரசைத் தலைமை தாங்கும் நபருக்கு வழிகாட்ட விருப்பம். அதற்கு இன்னும் காலம் உள்ளது. உத்தரப் பிரதேச தேர்தலுக்காகப் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பேரணிகள் கூட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்கள் கள நிலவரத்தை உணர்ந்து கொண்டனர் என்பதையே இது காட்டுகிறது" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+