ஜூலை 4ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு.. பெரும்பான்மையை நிரூபிக்க ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆளுநர் உத்தரவு
மும்பை: மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் வரும் 4ம் தேதி முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் பகத் சிங் கோஷியாரி உத்தரவிட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் கடந்த ஜூன் 20ம் தேதி சிவசேனா கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஏக்நாத் ஷிண்டே திடீரென கட்சித்தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதனைத்தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏ-க்கள் அசாம் மாநிலத்தில் முகாமிட்டனர். கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட அதிருப்தி எம்எல்ஏ-க்கள் ஏக்நாத் ஷிண்டே பின் சென்றதால், சிவசேனா ஆட்சி கவிழும் சூழல் உருவாகியது. தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெற்ற பரபரப்புக்கு மத்தியில், நேற்று முன்தினம் உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து எதிர்க்கட்சி தலைவராக இருந்த பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அதிருப்தி சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். இச்சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் பட்னாவிஸ், முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார் என்று அறிவித்தார். பட்னாவிஸ் முதல்வராக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென ஏக்நாத் ஷிண்டேயை பாஜக ஏன் முதலமைச்சராக்கியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
தொடர்ந்து பேசிய ஏக்நாத் ஷிண்டே, பாஜகவுக்கு 120 எம்எல்ஏக்கள் உள்ளனர். இருந்தும் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சர் பதவியை ஏற்கவில்லை. பால்தாக்கரேவின் தொண்டனாகிய என்னை முதலமைச்சராக அறிவித்துள்ளார். இதற்காக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, தேவேந்திர பட்னாவிஸ் உள்பட பிற தலைவர்களுக்கு நன்றியை தெரிவித்து கெள்கிறேன். என்னுடன் சிவசேனாவை சேர்ந்த 40 எம்எல்ஏக்கள் உள்பட மொத்தம் 50 எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்களின் உதவியால் தான் இந்த போரில் ஈடுபட்டோம். இந்த 50 பேரும் என்மீது வைத்த நம்பிக்கையை ஒரு துளி கூட சிதைக்க விடமாட்டேன். இவர்களுடன் கடைசி வரை உடன் அழைத்து செல்வேன் என்று தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து நேற்று இரவு 7 மணியளவில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆளுநா் பகத் சிங் கோஷியாரி முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். சிவசேனா நிறுவனா் பால் தாக்கரே, மறைந்த மூத்த தலைவா் ஆனந்த் திகே ஆகியோரை வணங்கி மராத்தி மொழியில் ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றார். அவரைத் தொடா்ந்து, எதிா்க்கட்சித் தலைவராக இருந்த பாஜக மூத்த தலைவா் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதலமைச்சராக பதவியேற்றார்.
இந்தநிலையில் மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் வரும் 4 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என அளுநர் பகத் சிங் கோஷியாரி அறிவித்துள்ளார். இதற்காக நாளை சபாநாயகர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெறுகிறது. நாளை மறுநாள் சபாநாயகர் தேர்வாகிறார். அதன்பின் நாளை முதல் தொடங்கவிருந்த 2 நாள் சிறப்பு பேரவை கூட்டம் ஜூலை 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில் கூட்டத்தில், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனது பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் பகத் சிங் கோஷியாரி உத்தரவிட்டுள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications