பெட்ரோல் லிட்டர் ரூ.200? அலறும் உலக நாடுகள்! இந்தியா ரூ.95க்கு தருகிறதே எப்படி? மோடியின் மெகா திட்டம்
சென்னை: மேற்கு ஆசியப் போர் பதற்றத்தால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை விண்ணைத் தொட்டுள்ள நிலையில், பல வளர்ந்த நாடுகளே பெட்ரோல் விலையை உயர்த்த முடியாமல் திணறி வருகின்றன. அண்டை நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு தலைவிரித்தாடினாலும், இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு சுமார் ரூ.95 என்ற அளவில் நிலையாக வைக்கப்பட்டிருப்பது உலகையே வியக்க வைத்துள்ளது. இந்த இக்கட்டான சூழலை முன்கூட்டியே கணித்து, மத்திய அரசு மேற்கொண்ட அந்தப் 'பக்கா' பிளான் மற்றும் சாமர்த்தியமான காய்நகர்த்தல்கள் என்னென்ன என்பதை இங்கே சுருக்கமாக பார்ப்போம்
மேற்கு ஆசியாவில் போர் தீவிரமடைந்து வருவதால், உலக நாடுகளின் எரிபொருள் விநியோகச் சங்கிலி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து இடையூறுகளால், கடந்த சில வாரங்களில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 200 ரூபாயைத் தாண்டியுள்ளது. அண்டை நாடுகளான இலங்கை மற்றும் பாகிஸ்தானில் எரிபொருள் ரேஷன் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை
ஆனால் நம்முடைய இந்தியாவில் மட்டும் பெட்ரோல் விலை சுமார் 95 ரூபாய் என்ற அளவில் நிலையாக நீடிப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏனென்றால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், அதன் தாக்கம் பொதுமக்கள் மீது குறைவாக இருக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கமாக உள்ளது.
இதை பற்றி மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணைச்செயலாளர் சுஜாதா சர்மா நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது "அதிகரித்து வரும் உலகளாவிய விலையால், கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு சுமார் ரூ.7 ஆயிரத்தில் இருந்து சுமார் ரூ.11,500 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் எல்.பி.ஜி. விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
ரூ.95க்கு இந்தியா தருகிறதே
எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் இழப்புகளை சந்தித்த போதிலும், கலால் வரியைக் குறைத்தல், எல்.பி.ஜி. உற்பத்தியை அதிகரித்தல், பி.என்.ஜி. இணைப்புகளை ஊக்குவித்தல் மற்றும் நிலையான எரிவாயு வினியோகத்தை உறுதி செய்தல் ஆகியவற்றின் மூலம் நுகர்வோரை பாதுகாக்க இந்திய அரசு செயல்படுகிறது.
ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை கிட்டத்தட்ட ரூ.200 ஆக இருக்கிறது. ஆனால், ஆனால், இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சுமார் ரூ.95 ஆக உள்ளது. (டெல்லி விலை). நாட்டில் எந்தவொரு வினியோகஸ்தருக்கும் பற்றாக்குறை ஏற்படாத வகையில், தடையற்ற எல்.பி.ஜி. வினியோகத்தை அரசாங்கம் உறுதி செய்துள்ளது" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தொலைநோக்குப் பார்வை
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், இந்த விலை நிலைத்தன்மைக்கு இந்தியாவின் சாமர்த்தியமான இறக்குமதி கொள்கையும் ஒரு முக்கிய காரணம் என்றே சொல்லலாம்.. போர் சூழலைக் கருத்தில் கொண்டு, வளைகுடா நாடுகளை மட்டும் நம்பியிருக்காமல் ரஷ்யா உள்ளிட்ட பிற நாடுகளிடமிருந்தும் இந்தியா கச்சா எண்ணெயைத் தாராளமாக இறக்குமதி செய்து வருகிறது.
அதேபோல், அவசர காலத் தேவையைச் சமாளிக்க இந்தியாவில் உள்ள உத்தேச எண்ணெய் சேமிப்பு கிடங்குகளில் போதுமான அளவு எண்ணெய் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது. அரசின் இத்தகைய தொலைநோக்குப் பார்வை மற்றும் முறையான திட்டமிடலால், உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியிலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது இங்கு கவனிக்கத்தக்கது...!!












Click it and Unblock the Notifications