புது மருமகள் வந்த யோகம்.. ஒரே வாரத்தில் ரூ.25,000 கோடி அதிகரித்த முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு! செம
மும்பை: கடந்த ஜூலை 12ம் தேதி உலகமே வியக்கும் வகையில் முகேஷ் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நடைபெற்றது. புது மருமகள் வந்த யோகமோ என்னவோ.. அதன் பிறகு முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு மளமளவென உயர்ந்த நிலையில், இதன் மூலம் சுமார் ஒரு வாரத்தில் மட்டும் அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் ரூ.25,000 கோடி அதிகரித்துள்ளது.
கடந்த ஜூலை 12ம் தேதி முகேஷ் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நடைபெற்றது. உலகமே வியக்கும் வகையில் ஆனந்த் அம்பானியின் திருமணம் நடந்தது. சர்வதேச பிரபலங்கள் பலரும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.

செல்வம் அதிகரிப்பு: அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பாலிவுட் பிரபலங்கள் எனப் பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மிகவும் ஆடம்பரமாக நடந்த இந்த திருமணத்தால் அம்பானியின் செல்வம் எவ்வளவு குறைந்திருக்கும் என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். ஆனால், அவரது செல்வம் குறையவில்லை.. மாறாகக் கடந்த சில வாரங்களில் அவரது செல்வம் அதிகரிக்கவே செய்துள்ளது.
திருமணத்திற்கு பிறகான நாட்களில் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு சுமார் ₹25,000 கோடி (தோராயமாக $3 பில்லியன்) அதிகரித்துள்ளது. கடந்த ஜூலை 5ஆம் தேதி அம்பானியின் நிகர மதிப்பு 118 பில்லியன் டாலராக இருந்ததாக ப்ளூம்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸ் தெரிவித்திருந்தது. இது ஜூலை 12இல் $ 121 பில்லியனாக உயர்ந்தது. அம்பானியின் செல்வம் இந்தளவுக்கு உயர்ந்த நிலையில், உலகின் பணக்காரர்களில் பட்டியலிலும் இது எதிரொலித்தது.
முன்னேற்றம்: உலக பணக்காரர்கள் பட்டியலில் 12வது இடத்தில் இருந்த முகேஷ் அம்பானி, 11ஆவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். மேலும், ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராக முகேஷ் அம்பானி தொடர்கிறார்.
தனது புதிய மருமகள் ராதிகா மெர்ச்சன்ட் வந்த நேரம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் விலை மளமளவென உயர்ந்துவிட்டது. இதுவே அவரது சொத்து மதிப்பு கடந்த 10 நாட்களில் உயரக் காரணமாக இருக்கிறது. திருமண நாளில், ரிலையன்ஸ் பங்குகள் 1% உயர்ந்தன.. கடந்த மாதத்தில் மட்டும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 6.65% உயர்ந்துள்ளன..
உயர்ந்துள்ளன: மேலும் கடந்த ஆறு மாதங்களில், அவை 14.90% வரை உயர்ந்துள்ளன. இருப்பினும், திருமணத்திற்கு அடுத்த ரிலையன்ஸ் பங்குகள் 1.11% சரிந்து, ₹3,159இல் வர்த்தகமானது. இப்போது ரிலையன்ஸ் பங்கு 3170 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது புது மருமகள் வந்த பிறகு முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.25,000 கோடி அதிகரித்துள்ளது. உலக பணக்காரர்கள் லிஸ்டிலும் அவரை டாப் லெவலுக்கு கூட்டிச் சென்றுள்ளது.
அதிகம்: கடந்த மார்ச் மாதம் குஜராத்தின் ஜாம்நகரில் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் நடந்த நிலையில், மகாராஷ்டிராவின் மும்பையில் திருமணம் நடந்தது. ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு ரூ.4,000- 5,000 கோடி செலவாகி இருக்கும் எனக் கூறப்படுகிறது. இது பார்க்க மிகப் பெரிய தொகை போலத் தோன்றினாலும் சராசரி இந்தியக் குடும்பங்கள் தங்கள் நிகர சொத்து மதிப்பில் திருமணத்திற்குச் செலவு செய்வதைக் காட்டிலும் இது குறைவாகும். அதாவது அம்பானி தனது சொத்து மதிப்பில் 0.5 சதவீதத்தை மட்டுமே தனது மகன் திருமணத்திற்குச் செலவு செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications