மும்பையில் நுழைந்த "ஆபத்தான" மனிதர்! சீன, பாக்.-இல் பயிற்சி பெற்றவர்! என்ஐஏ கொடுத்த வார்னிங்! பரபர
மும்பை நகரில் நுழைந்த ஆபத்தான நபர் குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது.
மும்பை: வெளிநாடுகளில் பயிற்சி பெற்ற ஆபத்தான ஒரு நபர் இப்போது மும்பைக்கு வந்துள்ளதாக என்ஐஏ அமைப்பினர் மும்பை போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் மும்பை போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.
கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதலை யாராலும் மறக்கவே முடியாது. பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் மும்பையில் பல இடங்களில் திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தினர். பல இடங்களில் துப்பாக்கிச் சூடுகளை நடத்தினர்.
கடல் வழியாக நுழைந்த பயங்கரவாதிகள் 12 இடங்களில் தாக்குதல் நடத்தினர். மொத்தம் நான்கு நாட்கள் நடந்த இந்தத் தாக்குதலில் இறுதியில், ஒரு பயங்கரவாதி உயிருடன் பிடிக்கப்பட்டார். மற்ற அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஆபத்தான நபர்
இந்த மோசமான தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் மற்றும் போலீசார் என 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும், சுமார் 300 பேர் காயமடைந்தனர். அந்த நான்கு நாட்கள் மும்பை நகரமே ஸ்தம்பித்துபோனது. இந்த தாக்குதல் சம்பவம் மன ரீதியாகவும் மும்பைவாசிகளை கடுமையாகப் பாதித்தது. இந்தச் சம்பவத்தை யாராலும் நிச்சயம் சீக்கிரம் மறந்துவிட முடியாது. இதற்கிடையே வெளிநாடுகளில் பயிற்சி பெற்றுள்ள ஆபத்தான நபர் மும்பைக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

என்ஐஏ எச்சரிக்கை
பாகிஸ்தான் மற்றும் சீனாவில் பயிற்சி பெற்ற இந்தூரைச் சேர்ந்த அந்த நபர், இப்போது மும்பைக்கு வந்துள்ளதாக என்ஐஏ எச்சரித்துள்ளது. இது தொடர்பான எச்சரிக்கை மெயில் ஒன்றை மும்பை போலீசாருக்கு என்ஐஏ அனுப்பியுள்ளது. அதில் மின்னஞ்சலின் சப்ஜெக்டில் "டேஞ்சர்" என்று கூறப்பட்டுள்ளது. சர்பராஜ் மேமன் என்ற அந்த நபர் ஆபத்தானவராக இருக்கக் கூடும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த நபர் இந்தூரில் உள்ள தார் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

சீனா, பாகிஸ்தான் பயணம்
குறிப்பிட்ட அந்த நபர் 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் சீனாவுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.. மேலும், ஹாங்காங் மற்றும் பாகிஸ்தானுக்கும் அவர் சென்று பயிற்சி பெற்றதாகக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், அவர் பாகிஸ்தான் சென்றதற்கான கூடுதல் தகவல்கள் எதுவும் அதில் இல்லை. மேலும், என்ஐஏ அனுப்பிய அந்த எச்சரிக்கை மெயிலில் குறிப்பிட்ட அந்த நபரின் ஆதார் அட்டை, பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட தகவல்களும் இணைக்கப்பட்டுள்ளன. 1982இல் பிறந்த சர்பராஜ் மேமன் என்ற அந்த நபரின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் அதில் கூறப்பட்டுள்ளது.

மும்பை போலீசார்
இந்த தகவல்களை மும்பை போலீஸ், பயங்கரவாத எதிர்ப்புப் படை உள்ளிட்ட மத்திய அமைப்புகளுக்கு ஏஎன்ஐ அனுப்பியுள்ளது. அந்த நபர் குறித்த மேலும் பல தகவல்களை மும்பை போலீசாரும், என்ஐஏவும் இந்தூர் போலீசாரிடம் பகிர்ந்துள்ளனர். அவர் வேறு எங்கெல்லாம் சென்றார் என்பது குறித்த கூடுதல் தகவல்களைச் சேகரிக்கும் முயற்சியில் மும்பை போலீசார் இறங்கியுள்ளனர். இதையடுத்து போலீசார் உஷார் நிலையில் உள்ளனர். மேலும், அந்த நபர் குறித்துக் கூடுதல் தகவல்களைச் சேகரிக்கும் நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர்.

உஷார் நிலையில் மும்பை போலீஸ்
இது குறித்துக் குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த மின்னஞ்சலில் கூறப்பட்டவைக் குறித்து விசாரணையில் இறங்கியுள்ளோம். சம்மந்தப்பட்ட நபர் குறித்து அனைத்து தரவுகளையும் சேகரிக்கவும் அவரை கண்டறியவும் முயன்று வருகிறோம். ஆதார் உள்ளிட்ட தகவல்களை அனுப்பியுள்ளனர். அதில் இருக்கும் முகவரிக்குச் சென்று முதலில் விசாரணையைத் தொடங்கியுள்ளோம். இதற்காக முக்கிய அதிகாரிகள் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.. இது மட்டுமின்றி முழு மும்பை நகர போலீசாரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்" என்று அவர் தெரிவித்தார்.

சீனாவில் பயிற்சி?
அதேபோல பயங்கரவாத தடுப்பு பிரிவில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய மற்றொரு மூத்த அதிகாரி, "1992 முதல் 2021 வரை 10 ஆண்டுகளுக்கு மேல் நான் பயங்கரவாத தடுப்பு பிரிவில் பணியாற்றியுள்ளோர். எந்தவொரு பயங்கரவாதியும் சீனாவில் பயிற்சி எடுத்ததாக நாங்கள் கேள்விப்பட்டது கூட இல்லை.. இதனால் இதில் சந்தேகம் உள்ளது. அதேநேரம், இதை அலட்சியமாகவும் விட்டுவிட முடியாது. உரிய விசாரணையை நடத்த வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications