"நான் எலிசபெத் டெய்லர்" மாமனாரிடம் போனில் கோபமாக சொன்ன நீடா அம்பானி.. இது புது கதையால்ல இருக்கு!
மும்பை: தனது மகனை திருமணம் செய்து கொள்வது குறித்து தனக்கு முகேஷின் தந்தை திருபாய் அம்பானி போன் செய்த போது அதை நம்பவில்லை என கூறிய நீடா அம்பானி, திரும்ப திரும்ப போன் செய்ததால் அவரை கோபத்தில் திட்டியதாகவும் நினைவலைகளை பகிர்ந்துள்ளார்.
இந்தியாவில் பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இவருக்கு நீடா அம்பானி என்ற மனைவியும் மகன்கள் ஆகாஷ் அம்பானி , ஆனந்த் அம்பானி மகள் ஈஷா அம்பானி ஆகியோர் உள்ளனர். இரு மகன்களுக்கும் மகளுக்கும் திருமணமாகிவிட்டது.

இந்த நிலையில் நீடா அம்பானி- முகேஷ் அம்பானி காதல் கதை குறித்த விஷயங்கள் வைரலாகி வருகிறது. அதாவது நீடா அம்பானி சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். இவர் ஆசிரியை, சிறந்த பரதநாட்டிய கலைஞரும் ஆவார். இவரது நடன நிகழ்ச்சிக்கு ஒரு நாள் திருபாய் அம்பானியும் மனைவி கோகிலா பென்னும் சென்றிருந்தனர்.
நீடா அம்பானி: அப்போது நீடா அம்பானியின் நடனத்தால் மெய்மறந்த இருவரும் இவரை போன்ற ஒருவர்தான் நம் மகன் முகேஷுக்கு மனைவியாக வரவேண்டும் என நினைத்துவிட்டனர். இதையடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் இருந்து நீடா அம்பானியின் வீட்டு முகவரியையும் போன் நம்பரையும் பெற்றுக் கொண்டனர். இதையடுத்து திருபாய் தம்பதி, நீடாவின் பெற்றோரிடம் பேசினர்.

முகேஷ் அம்பானி : பின்னர் நீடாவும் முகேஷும் சிலநாட்கள் பழகி பிறகு மனதிற்கு பிடித்ததும் திருமணம் செய்ய ஒப்புக் கொண்டனர். முகேஷ் அம்பானி நீடா அம்பானி தனது காதலை ஏற்க ஒரு முறை அவரை காரில் அழைத்து கொண்டு சென்ற போது சிக்னலில் வைத்து காதலை சொன்னதாகவும் அதற்கு நீடா எந்த பதிலையும் சொல்லாததால் பதில் சொன்னால் வாகனத்தை எடுப்பேன் என திரைப்படங்களில் ஹீரோக்கள் அடம்பிடிப்பதை போல் முகேஷ் அடம்பிடித்ததாக சொல்லப்படுகிறது. இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை.
நடுத்தர குடும்பம்: பணக்காரராக இருந்தும் தனது மகனுக்கு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து வைத்தது குறித்து திருபாயை அனைத்து தரப்பினரும் பாராட்டியிருந்தனர். இந்த நிலையில் நீடா அம்பானி தனது மாமனார் திருபாய் குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டார். தனது நடனத்தை பார்த்து திருபாய் அம்பானி தன்னை மருமகளாக்க எனது விருப்பத்தை பெற நினைத்தார்.

திருபாய் அம்பானி: இதற்காக தனக்கு போன் செய்தார். முதலில் தான் திருபாய் அம்பானி பேசுவதாக கூறினார். இதை நீடாவால் நம்பமுடியவில்லை, அவ்வளவு பெரிய பணக்காரர் தனக்கு எப்படி போன் செய்வார். யாரோ தன்னை ஏமாற்றுகிறார்கள் என்பதால் என்ன விளையாடுகிறீர்களா என கேட்டு போனை கட் செய்துவிட்டார். இதனால் திருபாய் மீண்டும் நீடாவுக்கு போன் செய்தார்.
கோபமடைந்த நீடா: தான் உண்மையில் திருபாய் அம்பானிதான் பேசுறேன், நம்புங்கள் என்றாராம். இதனால் மீண்டும் கோபமடைந்த நீடா, அப்படியா நீங்கள் திருபாய் அம்பானின்னா நான் எலிசபெத் டெய்லர் என கோபத்துடன் கூறிவிட்டு போனை மீண்டும் கட் செய்துவிட்டாராம். இதையடுத்து மீண்டும் போன் மணி ஒலித்தது. அப்போது அந்த காலை நீடா எடுக்கவில்லையாம்.

போனில் பேசிய திருபாய்: இதனால் நீடாவின் தந்தை போனை எடுத்து பேசியுள்ளார். அப்போதுதான் தெரிந்தது, தனது மகளிடம் பேசியது திருபாய் அம்பானிதான். இதையடுத்து முகேஷின் திருமணம் குறித்து பேச நீடாவிடம் சம்மதம் கேட்க போனை அவரிடம் கொடுக்க சொன்னாராம் திருபாய். இதற்கு நீடா சம்மதம் சொல்ல திருபாய் அம்பானி, தலால் வீட்டிற்கு அதாவது நீடாவின் வீட்டிற்கு 3 முறை சென்றுள்ளார்.
திருமணத்தில் முடிந்தது: மகனை நீடாவுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து காரை எடுத்து கொண்டு லாங் டிரைவ் சென்ற போது இருவரும் காதலர்களாக வந்தனராம். இதன் பின்னர்தான் இருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன்பே மாமனார் போனில் பேசிய போது அதை நீடா அம்பானி நம்பாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.@ அம்பானி இதையெல்லாம் கூட செய்வாரா.. வியப்பில் வாயடைத்து போன நெட்டிசன்கள்.. முகேஷ் அம்பானி வீடியோ வாவ்
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications