Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகாராஷ்டிராவில் நாளைக்குள் புதிய முதல்வர் பதவியேற்காவிட்டால் ஜனாதிபதி ஆட்சியா? என்ன நடக்கும்?

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் பதவிக்காலம் நாளையுடன் (நவம்பர் 26) முடிவடைவதால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், முதலமைச்சர் யார் என்பதில் குழப்பம் நீடிக்கிறது. சட்டசபையின் பதவிகாலம் நாளையுடன் முடிவதால், நாளைக்குள் புதிய முதலமைச்சர் பதவியேற்க வேண்டும், இல்லையென்றால் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வரும் என தகவல்கள் பரவி வந்தன. ஆனால், மகாயுதி கூட்டணி வட்டாரங்கள் வேறு கணக்கைச் சொல்கின்றன.

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலில், ஆளும் கட்சி கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. பாஜக, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே அணி), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் அணி) அடங்கிய மகாயுதி கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. பாஜக தனிப்பெரும் கட்சியாக 132 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. கூட்டணி கட்சிகளான சிவசேனாவின் ஷிண்டே அணி 57 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் அணி 41 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

maharashtra assembly election 2024 maharashtra bjp eknath shinde politics

பாஜக கூட்டணி அமோக வெற்றி: ஒட்டுமொத்தமாக பாஜக கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மகா விகாஸ் அகாதி கூட்டணியில் காங்கிரஸ் 16 இடங்களிலும், உத்தவ் தாக்கரேவின் சிவ சேனா 20 இடங்களிலும், சரத் பவாரின் சரத்சந்திர பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சி 10 இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற்றன.

தற்போது பாஜக கூட்டணியில் சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராகவும், பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்களாகவும் உள்ளனர். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், குறிப்பாக பாஜக 132 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் புதிய முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அடுத்த முதல்வர் யார்?: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக தனிப்பெரும் கட்சியாக 132 இடங்களை கைப்பற்றி உள்ளதால், அக்கட்சியின் மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிர மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்பார் என பாஜகவினர் கூறி வருகின்றனர். ஆனால், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, தனது முதல்வர் நாற்காலியை விட்டுத்தரத் தயாராக இல்லை. எனவே மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் என்பதில் இன்னும் சஸ்பென்ஸ் நீடிக்கிறது.

நவம்பர் 26 கடைசி நாள்?: இந்தச் சூழலில் தான் நவம்பர் 26 ஆம் தேதியுடன் மகாராஷ்டிர சட்டப்பேரவையின் பதவிகாலம் முடிவடைவதால் அதற்குள் புதிய முதலமைச்சர் பதவியேற்க வேண்டும் என்றும், நவம்பர் 26 ஆம் தேதி நள்ளிரவுக்குள் பதவியேற்கவில்லை என்றால், அதன் பிறகு மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வரும் என்றும் கருத்துகள் எழுந்து சலசலப்பு எழுந்துள்ளது.

ஆனால், இதனை மகாயுதி கூட்டணி கட்சியினர் மறுத்துள்ளனர். சட்டப்பேரவையின் பதவிகாலம் 26 ஆம் தேதியுடன் முடிவடைந்தாலும், புதிய முதல்வர் பதவியேற்கும் வரை முதல்வர் ஷிண்டேவே காபந்து முதல்வராக தொடர்வார், குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்படாது, கடந்த காலங்களிலும், இதுபோல தாமதமாகவே முதல்வர் பதவ்யேற்பு நடந்துள்ளது எனத் தெரிவிக்கின்றனர்.

கடந்த கால வரலாறு: கடந்த காலங்களில் சட்டப்பேரவையின் பதவிகாலம் முடிவடைந்த சில நாட்கள் கழித்துத்தான் புதிய முதலமைச்சர் பதவியேற்பு விழா நடத்தப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 10வது சட்டப்பேரவையின் பதவிகாலம் 2004 அக்டோபர் 19 ஆம் தேதி நிறைவடைந்தது. ஆனால், புதிய முதலமைச்சர் நவம்பர் 1 2004 அன்றுதான் பதவி ஏற்றார்.

அதேபோல, 11வது சட்டமன்றத்தின் பதவிகாலம் 2009 நவம்பர் 3 ஆம் தேதி அன்று முடிவடைந்தது. ஆனால், புதிய முதலமைச்சர் 2009 நவம்பர் 7 ஆம் தேதிதான் பதவியேற்றார். மேலும், 12 வது சட்டமன்றத்தின் பதவிகாலம் 2014 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி முடிவடைந்த நிலையில், புதிய முதலமைச்சர் பதவியேற்பு விழா அக்டோபர் 31 ஆம் தேதி நடைபெற்றது.

தாமதமாகவே பதவியேற்பு: 13வது சட்டமன்றத்தின் பதவிக்காலம் 2019 நவம்பர் 9 ஆம் தேதி முடிவடைந்தது, ஆனால், 14வது சட்டமன்றத்தின் புதிய முதலமைச்சருக்கான பதவியேற்பு விழா 2014 நவம்பர் 28 ஆம் தேதியன்றுதான் நடந்தது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பொதுவாகவே ஆட்சி அமைக்க கால அவகாசம் எடுத்துக்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே தற்போதைய மகாராஷ்டிராவின் சட்டமன்ற பதவிக்காலம் நவம்பர் 26 ஆம் தேதியுடன் (நாளை) முடிவடைகிறது, ஆனால் அரசாங்கம் அமைப்பதற்கு கடுமையான காலக்கெடு எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. தேர்தலை நடத்த வேண்டிய காலக்கெடு, தேர்தல் கமிஷனுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சி அமைக்க போதிய அவகாசம் உள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஆளுநர் ஆலோசனை: அரசு அமைப்பதற்கான காலக்கெடு குறித்து அட்வகேட் ஜெனரல் மற்றும் பல சட்ட நிபுணர்களின் கருத்தை மகாராஷ்டிரா ஆளுநர் கேட்டுள்ளார். அதில், நவம்பர் 26 ஆம் தேதிக்கு முன்னர் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. முந்தைய அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவடைந்து 11 நாட்கள் வரை புதிய அரசாங்கம் அமைவதாக மகாராஷ்டிரா அரசியல் வரலாற்று முன்னுதாரணங்கள் தெரிவிக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+