காமம் இல்லை, காதல் தான்.. சிறுமி பாலியல் வழக்கில் இளைஞருக்கு ஜாமீன் கொடுத்த நீதிபதி கருத்து
மும்பை: 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி இளைஞருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இருவருக்கும் இடையே இருந்த பாலியல் உறவு காதலால் ஏற்பட்டுள்ளது.. காமத்தால் இல்லை.. எனவும் நீதிபதி கூறினார்.
மகராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு 13 வயது சிறுமி திடீரென மாயமாகிவிட்டதாக போலீசாருக்கு புகார் வந்தது. சிறுமியின் தந்தை இந்த புகாரை அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் சிறுமியை தேடி கண்டுபிடித்தனர். பின்னர் சிறுமியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகர தகவல் தெரியவந்தது. அதாவது, தான் தனக்கு தெரிந்த இளைஞர் நிதின் தபேரோவுடன் விருப்பப்பட்டுத்தான் சென்றதாகவும் தன்னை திருமணம் செய்து கொள்வதாக அவர் உறுதியளித்து இருக்கிறார்.

எனவே, நானாக விருப்பப்பட்டு அவருடன் சென்றேன். வீட்டில் இருந்து செல்லும் போது நகை மற்றும் பணம் ஆகியவற்றையும் எடுத்து சென்று அவருடன் தங்கியிருந்ததாகவும் சிறுமி கூறினார். பாதிக்கப்பட்ட சிறுமி மைனர் என்பதால் அவரை கடத்தி சென்ற இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி இளைஞர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இளைஞர் தாக்கல் செய்த மனு மீதான் விசாரணை மும்பை ஹைகோர்ட் நாக்பூர் கிளையில் நடைபெற்றது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி உர்மிளா ஜோஷி பல்கே, இளைஞருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இளைஞருக்கு ஜாமீன் அளிப்பதற்காக நீதிபதி அளித்த தீர்ப்பில் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-
இருவருக்கும் இடையே இருந்த பாலியல் உறவு காதலால் ஏற்பட்டுள்ளது. காமத்தால் இல்லை. தானாக விருப்பப்பட்டே குற்றம் சாட்டப்பட்டுள்ள இளைஞர் நிதின் தபேரோவுடன் சென்றுள்ளார். குற்றம் சாட்டப்பட்டு இருக்கும் மனுதாரரும் 26 வயதே ஆன இளம் வயது நபராக உள்ளார். இதனால், காதலால் இருவரும் ஒன்றாக இருந்துள்ளனர்" என்று கூறியுள்ளார்.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications