Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"முகத்தை பார்த்தாலே எல்லாம் தெரிகிறது!" துணை முதல்வரான பட்னாவிஸ்..உண்மையை பளிச் என சொன்ன சரத் பவார்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் பட்னாவிஸ் துணை முதல்வராகப் பதவி ஏற்று உள்ள நிலையில், இது தொடர்பாக என்சிபி நிறுவனர் சரத் பவார் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நீடித்த அரசியல் குழப்பம் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. அதிருப்தி எம்எல்ஏக்களால் மகா விளாஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது.

சுமார் 2.5 ஆண்டுகளாக முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியில் இருந்து விலகினார். தொடக்கம் முதலே இதில் ஷிண்டே கச்சிதமாகக் காய் நகர்த்தி வந்தார்.

 ஷிண்டே முதல்வர்

ஷிண்டே முதல்வர்

மகா விளாஸ் கூட்டணி அரசு கவிழ்ந்த பின்னர், பாஜக- சிவசேனா ஆட்சி அமைக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். பட்னாவிஸ் முதல்வராகவும் ஷிண்டே துணை முதல்வராகவும் பொறுப்பு ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், யாருமே எதிர்பார்க்காத வகையில் ஷிண்டே முதல்வராகப் பொறுப்பு ஏற்றார். தான் ராஜினாமா செய்தால் சிவசேனாவை சேர்ந்த மற்றொருவர் முதல்வராகப் பதவி ஏற்பார் என்பதற்கு என்ன உத்தரவாதம் என உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பிய நிலையில், அதற்குப் பதிலடியாக இது அமைந்தது.

 பட்னாவிஸ் துணை முதல்வர்

பட்னாவிஸ் துணை முதல்வர்

பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகப் பதவி ஏற்றார். இந்த மெகா ட்விஸ்ட்டை யாருமே எதிர்பார்க்கவில்லை. முதலில் தேவேந்திர பட்னாவிஸ் அரசின் பங்கேற்கப்போவதில்லை என்றே அறிவித்து இருந்தார். பாஜக நிர்வாகிகள் பலரும் அவர் பதவி ஏற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். அதை அவர் கடைசி நேரத்தில் தான் ஏற்றுக் கொண்டு இருந்தார்.

 மகிழ்ச்சியாக இல்லை

மகிழ்ச்சியாக இல்லை

தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வர் பதவி ஏற்றதற்கு என்ன காரணமாக இருக்கும் என்பது குறித்து பலரும் பல்வேறு கருத்துகளைக் கூறி வருகின்றனர். மகாராஷ்டிராவின் துணை முதல்வராகப் பதவியேற்ற பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ், மகிழ்ச்சியுடன் அதைச் செய்திருக்க வாய்ப்பே இல்லை என்று மூத்த அரசியல்வாதியான சரத் பவார் தெரிவித்து உள்ளார்.

 முகத்தைப் பாருங்கள்

முகத்தைப் பாருங்கள்

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "தேவேந்திர ஃபட்னாவிஸ் துணை முதல்வர் பதவியை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதாக நான் நினைக்கவில்லை. பதவி ஏற்பு விழா வீடியோவை பாருங்கள். பட்னாவிஸ் முகத்தைப் பார்த்தாலேயே தெரிகிறது, அவர் மகிழ்ச்சியாக இல்லை என்று! அவர் நாக்பூரில் வசிப்பவர். எனவே, ஆர்எஸ்எஸ் சொல்வதை அவர் கேட்டு இருகக்கலாம்" என்றார்.

 தேசிய தலைமை

தேசிய தலைமை

அதேநேரம் தேசிய பாஜக தலைமையின் கோரிக்கையைத் தொடர்ந்து அவர் துணை முதல்வர் பதவியை ஏற்றுள்ளார். இது குறித்து பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கூறுகையில், "நான் அவரிடம் தனிப்பட்ட முறையில் கால் செய்து இது குறித்து கோரிக்கை விடுத்தேன். பட்னாவிஸ் துணை முதல்வராகப் பதவி ஏற்க வேண்டும் என்பது தேசிய தலைமையின் விருப்பம். அதை அவரிடம் தெரியப்படுத்தினேன். அதன் பின்னரே அவர் ஒப்புக் கொண்டார்" என்று கூறினார்.

 பட்னாவிஸ்

பட்னாவிஸ்

இது குறித்து பட்னாவிஸும் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒரு உண்மையான தொண்டராகக் கட்சியின் உத்தரவை நான் பின்பற்றுகிறேன். என்னை உயர்ந்த பதவிக்குக் கொண்டு வந்த கட்சியின் உத்தரவு எனக்கு முக்கியமானது. நேர்மையான தொண்டராக, கட்சியின் உத்தரவுகளை நான் பின்பற்றுகிறேன். எனக்கு உயர் பதவியைக் கொடுத்த கட்சியின் கட்டளையை நான் பின்பற்றுகிறேன்" என்று ட்வீட் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+